கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் வில், அம்பு படம், வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை, பானை மூடிகள், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உணவு பாத்திரங்களில் இரண்டு வித அளவு கொண்ட பாத்திரங்கள் கண்டறியப்பட்ட நிலையில், பண்டைய காலத்தில் குடும்பமாக வசித்திருக்க வாய்ப்புண்டு எனவே தான் வெவ்வேறு அளவு கொண்ட உணவு பாத்திரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை நடந்த அகழாய்வில் வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், படகு ஓவியம் வரைந்த பானை ஓடுகள் கிடைத்திருந்தன. தற்போது அகழாய்வில் வில், அம்பு வரைந்த பானை ஓடு கிடைத்துள்ளது. இதில் ஓவியம் முழுமையாக உள்ளது. மேலும் தமிழ் வரி வடிவ எழுத்துக்களும், கையடக்கமான பானை, சல்லடை பானை ஓடுகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: