கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் உறைகிணறு, பானை, சட்டிகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த மூன்று கட்ட அகழாய்வில் 7,600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் 2,200 ஆண்டுகள் பழமையானவை. தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த ஏப். 18ம் தேதி 4ம் கட்ட அகழாய்வு தொடங்கியது.

தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் இந்த ஆய்வு நடக்கிறது. இதற்காக 10 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. நான்காம் கட்ட ஆய்விலும் ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், பானை ஓடுகள், உடைந்த கண்ணாடி வளையல் போன்ற தொல்லியல் எச்சங்கள் இதுவரை கிடைத்துள்ளன. ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு குழிக்குள் சுடுமண் பானை, சட்டி கிடைத்துள்ளது. இவை அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. இன்னும் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைக்கும் என்று ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>