கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி நடக்கும் : சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்! மத்திய அமைச்சர் மகேஷ்சர்மா தகவல்!

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி நடக்கும் : சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்! மத்திய அமைச்சர் மகேஷ்சர்மா தகவல்!

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி நடக்கும் : சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்! மத்திய அமைச்சர் மகேஷ்சர்மா தகவல்!

”சிவகங்கை மாவட் டம் கீழடியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு மூன்று ஆண்டுகள் தொய்வின்றி தொடர்ந்து நடக்கும்,” என மத்திய சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ்சர்மா கூறினார்.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மகேஷ்சர்மா, மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல் திவாரி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஆகியோர் நேற்று கீழடி வந்தனர். மூன்றாம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தை பார்வையிட்டனர்.

கீழடியில் தமிழர்களின் பழமையான, தொன்மையான நாகரீகத்தின் அடையாளம் பொதிந்து கிடக்கிறது. இரண்டாம் நுாற்றாண்டு காலத்தில், வாழ்ந்த தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து காட்டுவதாக உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளில் நடந்த ஆய்வில், எண்ணற்ற பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. அவற்றை போற்றி பாதுகாக்கும் கடமை நமக்குண்டு. கீழடி அகழாய்வு ஐந்து ஆண்டுகள் கொண்டது. முதல் இரண்டு ஆண்டுகள் ஆய்வு முடிக்கப்பட்டு அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு, 40 லட்சம் ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடக்கும். இங்கு நடக்கும் அகழாய்வு வெளிப்படையானது. மூன்றாம் கட்ட அகழாய்வில் என்ன கிடைக்கப் போகிறது என யாருக்கும் தெரியாது. சிந்து சமவெளி நாகரீகத்தை விட கீழடி நாகரீகம் சிறந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கலாம். கீழடி அகழாய்வு அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமான ஒன்று தான். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய, மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் 26 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கீழடி அகழாய்வு அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமணன் என்ற தமிழர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார், இங்கு ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்போது கிடைத்துள்ள பொருட்கள் மூலம் அருங்காட்சியகம் அமைக்க வாய்ப்பு இல்லை. இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கலாம். கீழடியிலோ, மாவட்டத் தலைநகரான சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2 ஆண்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிதி ஒதுக்கீடும் தாமதமானது. தற்போது ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களை இந்தியா முழுமைக்கும் பணியிடமாற்றம் செய்துள்ளோம் என்று அமைச்சர் மகேஷ்சர்மா கூறியுள்ளார்.

அறிக்கை வழங்க தாமதம்:

கீழடியில், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வு அறிக்கையை தர தாமதம் ஏற்பட்டது. இதனால் மத்திய தொல்லியல் துறையின் நிலைக்குழு கீழடி அகழாய்வுக்கு நிதி வழங்கவில்லை. தற்போது அகழாய்வு அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. ஓரிரு நாளில் மூன்றாம் கட்ட ஆய்வு துவங்கும், என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இரண்டு ஆண்டுகளில், இங்கு நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை, கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க உள்ளோம், என மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல் திவாரி கூறினார்.

விவசாயிகளுக்கு பாதிப்பிருக்காது :

அகழாய்வுக்கு நிலம் வழங்கியவர்களின் உறவினர்கள் சிலார் மைதீன், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மத்திய அமைச்சர் மகேஷ்சர்மாவை சந்தித்தனர். அமைச்சர் கூறுகையில், ”ஒரு உன்னதமான பணிக்கு நிலம் வழங்க உதவிய விவசாயிகளின் பணி போற்றுதலுக்குரியது. அகழாய்வுக்கு வழங்கிய நிலம் அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம். நிலம் வழங்கியோருக்கு உரிய நிதி வழங்கப்படும். பிற்காலத்தில் தாமாக முன் வந்து நிலம் வழங்க விவசாயிகள் முன் வந்தால், அதை மத்திய அரசு பரிசீலிக்கும்,” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: