காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது !

காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது !

காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது !

”காஞ்சிபுரம், 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் உடையது,” என, ஏனாத்துார், புவி தொல்லியல் ஆய்வாளர் கூறினார். தமிழக தொல்லியல் துறை சார்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அண்மைகால தொல்லியல் அகழாய்வுகள்’ என்ற தலைப்பில், சொற் பொழிவு நடந்தது.

இந்திய பண்பாட்டு துறை தலைவரும், புவி தொல்லியல் ஆய்வாளர் பேசியதாவது :

காஞ்சிபுரத்தில், 2002 முதல், 2014 வரை, 14 இடங்களில் அகழாய்வுகள் செய்தேன். அதில், 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, தற்போது வரை, தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீபெரும்புதுார், பால்நெரியூர் உள்ளிட்ட இடங்களில், இரும்பையும், துருப்பிடிக்காத இரும்புகளையும் உருக்கும், பழமையான ஆலைகள் இருந்துள்ளன. அதே போல, 100க்கும் மேற்பட்ட இடங்களில், கல் திட்டைகள் கிடைத்தன. அங்கு, பல்வேறு வகையான கற்கள், ஐந்து விதமான மண்பாண்டங்களும், உறைகளால் ஆன அமைப்புகளும் இருந்தன. ஆனால் அவற்றில், மனித எலும்போ, சாம்பலோ இல்லை. இறந்த மனிதர்களுக்கு, நீர் மற்றும் உணவு பொருட்களை வைத்து, சம்பிரதாயங்கள் செய்து, நினைவிடங்களை எழுப்பி இருக்கலாம் என, தெரிகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மேலும், வாழ்விட பகுதிகளிலும், கிணறுகள், தானிய கிடங்குகள், கால்நடைகளுக்கான நீர், தீவனம் வைக்க தேவையான அமைப்புகளை, சுடுமண் உறைகளால் செய்துள்ளனர். பல்லவர் காலத்திற்கு முன், பின், காஞ்சிபுரத்தில் உள்ள, பாலாறு, வேகவதி ஆற்றங்கரைகளில், வளமான நாகரிகம் இருந்துள்ளதை, பல அகழாய்வு சான்றுகளால் அறிய முடிகிறது. குறிப்பாக, இந்தியாவில் அரிதாக, ‘பஞ்ச காஞ்சி’ என்ற, சமண, புத்த, சைவ, வைணவ, சக்தி, பிரம்மேஸ்வர வழிபாடுகள் தழைத்து இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புத்த மதம் மட்டும், தற்போது அங்கு இல்லை; மற்றவை இன்னும் உள்ளன; அவற்றிற்கான கோவில்கள் நிறைய உள்ளன.

இந்தியாவிலேயே சிறந்த, புத்த, சமண, இந்து வேதங்களை போதிக்கும் கல்விக் கூடங்கள், காஞ்சிபுரத்தில் இருந்துள்ளன. காஞ்சிபுரத்தில், பல்லவர்களின் வருகைக்கு பின், திராவிட கலாசார கட்டடங்கள் பெருகியுள்ளன; கலைகள் வளர்ந்துள்ளன. நிகழ்ச்சியில், தொல்லியல் துறை ஆணையர், துணை இயக்குனர், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: