தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில்!

கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக் கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அரைமலை என்னும் பழம் பெயரைக் கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமண தீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.

இங்குள்ள சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக் கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>