சத்தியமங்கலம் :
கடம்பூர் மலைப் பகுதியில், 300 ஆண்டுகளாக வற்றாத அதிசய சுனைநீர் குட்டை, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தாகம் தீர்க்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில், கடம்பூர் மலை, ஒரு பகுதியாக உள்ளது. இங்கு, மல்லியம்மன் துர்க்கம் என்ற கிராமம், கடல் மட்டத்தில் இருந்து, 2,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்துக்கு, 10 கி.மீ. செங்குத்தான ஆபத்து நிறைந்த மலைப் பாதையில், கிராம மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
மலைப்பகுதி நடுவில், 1 கி.மீ. இல், 300 ஆண்டுகளாக வற்றாத அதிசய சுனைநீர் குட்டை உள்ளது. இதில், 5 முதல், 10 அடி ஆழத்தில் தற்போதும் நீர் நிரம்பி காணப்படுகிறது. சில ஆண்டுகளாக போதிய மழையில்லை. ஆனாலும், சுனைநீர் குட்டையில் இன்று வரை நீர் வற்றவில்லை. இவ்வழியே செல்லும் கிராம மக்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகள் மற்றும் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் தாகம் தீர்க்கும் குட்டையாக உள்ளது. விலங்குகள் பயன்பாட்டில் இருந்தாலும், நீரின் சுவை மாறவில்லை என்பது ஆச்சரியம். கடும் வறட்சியிலும், வற்றாத சுனைநீர் குட்டையால், இந்தப் பகுதி யில் வசிக்கும் எந்த வன விலங்குகளும் இடம் பெயராமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.