
அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல்: தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிப்பு!
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில், அரச குல பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தில், ‘அறம்’ வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
அப்போது, அரச குல பெண்கள், மூன்று பேர், போர் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது. தமிழகத்தில் இதுவரை, மூன்று பெண்கள் போர் செய்வது போன்ற நடுகல் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தனப்பள்ளி கிராமத்தில் தான், முதன் முதலில் இந்த நடுகல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ‘அறம்’ கிருஷ்ணன் கூறினார்.
13ம் நுாற்றாண்டு :
சந்தனப்பள்ளி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லில், மூன்று அரச குல பெண்கள், குதிரை மீது அமர்ந்து போர் செய்யும் வகையில் சித்தரிக்கப் பட்டுள்ளது. இது, 13 அல்லது 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம்.
மூன்று பெண்களின் வலது கையில் சிறிய ஆயுதமும், இடது கரம் மேல் நோக்கி மடிந்த நிலையிலும் உள்ளது. வெண்கொற்றக்குடை முதல் மற்றும் மூன்றாவது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பெண்களும், அரசிக்கு அடுத்த நிலையில் இருந்து போர் செய்பவர்களாக இருந்திருக்க வேண்டும். நடுவில் உள்ள பெண் சிற்பம், அரசியாக இருக்க வேண்டும். ஏனெனில், அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றக்குடை உள்ளது.
போரில், அரசி உட்பட மூன்று பெண்களும் இறந்திருக்க வேண்டும். அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம். அதே நடுகல்லில், ஒரு போர் வீரர், வாள் மற்றும் கேடயத்துடன் முன் வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படை வீரராக அவர் இருந்திருக்க வேண்டும்.
இச்சிற்பங்களின் மேற்புறத்தில், சிறு சிறு கோடுகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது, போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இரண்டாம் கம்பண் மற்றொரு நடுகல்லில், இரு பெண்கள் குதிரை மேல் அமர்ந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டுஉள்ளது. இதைப் பார்க்கும் போது, விஜயநகர பேரரசின், இரண்டாம் கம்பண்ணனின் மனைவி, மதுரை விஜயத்தின் போது, அரசனுடன் சென்று போரில் ஈடுபட்டதாகவும், அதை விளக்கும் வகையில் இந்த நடுகல் அமைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.