சாஸ்திரம்பாக்கம் மலைக்குன்றில் முதுமக்கள் தாழி; அகழ்வாய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை!

சாஸ்திரம்பாக்கம் மலைக்குன்றில் முதுமக்கள் தாழி; அகழ்வாய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை!

சாஸ்திரம்பாக்கம் மலைக்குன்றில் முதுமக்கள் தாழி; அகழ்வாய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை!

சாஸ்திரம்பாக்கம் மலை குன்றில், புதைந்து கிடக்கும் முதுமக்கள் தாழி, அகழ்வாய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பண்டைய நாகரிகங்கள், பாலாற்றங் கரையில் தோன்றியுள்ளன என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில், துாத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில், ஆதிச்சநல்லுாரில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பிரதிபலிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லாவரம், கீழகனி, மலைவையாவூர், பழவேரி, இளநகர், ஆப்பூர், பழைய சீவரம், குன்னத்துார், அம்மணம்பாக்கம், தத்தலுார் ஆகிய கிராமங்களில், முதுமக்கள் தாழி உட்பட அரிய, பழங்கால ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

செங்கல்பட்டு அடுத்த, சாஸ்திரம்பாக்கம், வெங்கடாபுரம், வெண்பாக்கம், குருவின்மேடு, தாசரிகுன்னத்துார் ஆகிய கிராமங்களில், வட்ட வடிவில் அமைந்துள்ள மலை குன்றுகளில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் வசித்துள்ளனர். சாஸ்திரம்பாக்கம் மலைக்குன்றைச் சுற்றி, ஆதிச்சநல்லுாரில் காணப்படும், அதே வகையிலான அரிய வகை இடுகாடு காணப்படுகிறது. இறந்தவர்களின் உடலை, 6 அடி முதல், 15 அடி வரை ஆழத்தில், தாழிகளில் வைத்து புதைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவ்வாறு புதைத்த பின், இறந்தவர்கள் நினைவாக கற்படை வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, இறந்தவர்களின் உடலை புதைத்து விட்டு, அதைச் சுற்றி கற்களை அடுக்கி, நினைவுச் சின்னங்கள் எழுப்பி உள்ளனர்.

குன்றுகளைச் சுற்றி, புதையுண்ட முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. பழங்கால கற்சிலை ஒன்றை, அப்பகுதி மக்கள், அன்னாசியம்மன் என, வழிபட்டு வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேற்கண்ட பகுதிகளில், மலைக்குன்றிகளில் அகழ்வாய்வுக்கு உத்தரவிட வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>