கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!

கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம்

கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம்

கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968):

தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்ததைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களின் படுகொலை நிகழ்வாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தஞ்சை மாவட்டம் வேளான்மை மிகுந்த செழுமையான மாவட்டமாக, பாசன வசதியும். விளைநிலங்கள் செழுமையாகவும், அதிக விளைச்சளைத் தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள், தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. வேளான் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை பொதுவாக அடிமையாக எண்ணி நடத்தி வந்தனர். அங்கு வேலை பார்த்து வந்த பண்ணை ஆட்கள் மிக குறைந்த ஊதியம் மற்றும் மிக குறைந்த உணவுவே வழங்கப்பட்டு வந்தது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் அவர்கள் வாழ்க்கை முறையை வெகுவாக பாதித்தும், மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் வசதியான வாழ்க்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும், அவர்கள் அடிமை நிலையும், குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடாமல் தடுத்து வந்தது. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவாயினும், அவர்களை பணி அமர்தியவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 1960 ஆம் ஆண்டு இந்திய – சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை.

தஞ்சை மண்ணில் “பண்ணையாள் முறை” ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும் சங்க உணர்வை பண்ணை ஆட்களுக்கு ஊட்டினர். விவசாயத் தொழிலாளர்கள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்று கூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியை விவசாயத் தொழிலாளர்கள் கேட்டார்கள். ஆனால், இதற்கு ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்தது. பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே கீழ்வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயத் தொழிலாளர்களளை, நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்த செய்தியால் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நில உடமையாளர், அவர்களின் அடியாட்களைக் கொண்டு, விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.

கிறித்துமசு நாளான, 1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயத் தொழிலாளர்களைத் தாக்கினார்கள். தொழிலாளர்களும், திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில், பலர் தெரிக்க ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் “ராமையன்” என்பவரின் குடிசைக்குள் ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோபாலகிருஷ்ண நாயுடு -வின் ஆட்களால், தீ வைக்கப்பட்டு, குடிசை எரிந்து சாம்பலானது. அடைந்திருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி குடிசைக்குள்ளேயே மாண்டனர்.

106 பேர் கைதானார்கள்: “இதை சாதிய மோதல்” என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள், இப்படியொரு செயலைச் செய்திருக்க வாய்பில்லை என சொல்லி, அவர்கள் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை” என்னும் ஆவணத் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்திருந்தது. ஒரு மணிநேரம் ஓடும் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) இதழ் சொல்லியது. இப்பொழுது, அந்த நிகழ்வு நடந்த நினைவகத்தில், கண்ணாடி குடுவையில் உயிர் நீத்தவர்களின் அஸ்தியை, சுதந்திர போராட்ட தியாகி ஐ. மாயாண்டி பாரதி என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கபட்டுள்ளதை காணலாம்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

1 Responses

  1. Pingback: Premnath Sampath

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: