1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!

1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!

1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!

வடுகர் ஆட்சி :

வடுக ஆட்சி என்பது சாதாரண ஆட்சி கிடையாது. வடுகர் காலத்தில் தெலுங்கும், சமற்கிருதமும் மட்டுமே ஆட்சிமொழி. சமற்கிருதம் மட்டுமே கல்வி மொழி.

மதுரையில் மட்டுமே, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேதபாடம் நடத்தக் கூடிய சமற்கிருதப் பள்ளிகள் இருந்துள்ளன.

அப்புறம் கும்பகோணம், தஞ்சாவூர்… இப்படி எங்கு பார்த்தாலும் சமற்கிருத பாடசாலைகள் தான்… வேதப்பாடசாலைதான்.

இப்படி, ஆட்சியிலும், கல்வியிலும் அறவே நீக்கப்பட்டது தமிழ். அறவே ஒதுக்கப்பட்டனர் தமிழர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கடந்த 50-ஆண்டுகால திராவிட ஆட்சியிலும் அதே போக்குத்தான் என்பதும் நம் கண்முன்னேயே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதைக் கொண்டு அறியலாம்.

1371-இல் வடுகர் ஆட்சி (14-ஆம் நூற்றாண்டில்) இங்கு வருகிறது.அதுக்கு முன்னாடி 60-70 ஆண்டுகாலம் துலுக்கர் ஆட்சி – முகமதியர்கள் கூத்தடிக்கிறான். ஆக, 1200 உடன் தமிழ் ஆட்சிமொழி, கல்விமொழி என்பது முடிந்து போனது.

பிற்கால சோழர்கள் காலத்திலிருந்த தமிழ் ஆட்சிமொழி , நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயன் காலத்தில் கல்விமொழியாக அனுமதிக்கப்படுகிறது.

தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களால் 1937-இக்கு அப்புறம் – அதாவது நீதிக்கட்சி் ஆட்சி முடிந்ததற்கப்புறம், தமிழ்வழிக் கல்வி வருகிறது.

1200-இலிருந்து 1938 வரைக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்றால், யாராவது ஒரு தமிழறிஞர் வீட்டிலே போய் அவர்கிட்டே படிக்க வேண்டும்.

அதுதான் உ.வே.சாமிநாதய்யர் காலம் வரைக்கும். உ.வே.சா. , மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற தமிழரிடம் சென்று தமிழ் கற்கிறார். தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் அப்பா தியாகராசரும் அவரிடம் தமிழ் கற்கிறார்.அந்த நன்றிக்கடனாக தன் பிள்ளைக்கு ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்று பெயர் சூட்டுகிறார்! (தெ.பொ.மீ – தென்னிலை -நாடார்).

ஆக, அந்தக்காலத்தில், தமிழ் அழியாமல் காத்ததற்கு ஒன்றிரண்டு தமிழ்ப் படித்த அறிஞர்கள், அவர்கள் ஒன்றிரண்டு மாணவர்களை உருவாக்கி விட்டுட்டுப் போவது, இப்படியேதான் இருந்திருக்கு!

இப்ப, 1938 இக்குப் பிறகு (2000 வரை) தமிழ்ப்பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன. இவர்களையே (திராவிடர்களை) தொடர்ந்து ஆளவிட்டால், மீண்டும் அடுத்த தலைமுறைக்கு, முன் சொன்னது போல்தான் இருக்கப்போகிறது.அதாவது 1200-இலிருந்து தமிழ் எப்படி, தனி ஆள்கள் ஒன்றிரண்டு பேருக்குக் கடத்தி விட்டுட்டுப் போனமாதிரி, இனிமேல் அப்படித்தான் கொஞ்சகாலம் போகும்; ஆனால், அதையும் முன்னே மாதிரி விடமாட்டான்; ஏனென்றால் தமிழ்தான் படிக்கப்போகிறோம் என ஒருத்தரும் இனி வரமாட்டான்! -சமூக இயங்கியல்.

அதனால் தான் சொல்லுகிறோம் ‘வடுக ஆட்சி என்பது சதாரண ஆட்சி கிடையாது!’ என்று.

இன்னொரு பெரிய கொடுமை என்னவென்றால், ‘மீண்டும் நாம் ஆள்வதற்கு உரியவர்கள்; நாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திடலாம்’ என்ற எண்ணமே அற்றுப்போகச் செய்தனர் அவர்களது இந்த 500-ஆண்டுகால வடுக ஆட்சியில்!

  • அருள்நிலா
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: