கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், பல காலமாகவே, தொல் பொருட்கள் கிடைத்து வந்தன. அதனால், 2014ல், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை, அங்கு அகழாய்வு நடத்தியது. இரண்டு கட்ட அகழாய்வு நடந்த நிலையில், மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்தது. இது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, தமிழக எம்.பி.,க்களும், பார்லிமென்டில் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வை செப்டம்பர் வரை மேற்கொள்ள, தென்னிந்திய தொல்லியல் பிரிவுக்கு, மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு பிரிவு மேற்கொண்ட அகழாய்வின் போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகமிக்க நகர் புதையுண்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த இரு கட்ட ஆய்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டைய கால பொருள்கள் கிடைத்துள்ளன. இப்பொருள்களில் சிலவற்றை கார்பன் பரிசோதனைக்கு அமெரிக்க ஆய்வுக்கூடத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் கீழடி அகழாய்வுப் பொருள்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அகழாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் அமர்நாத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அகழாய்வு பிரிவினர் கூறியதாவது :

மத்திய தொல்லியல் துறை, 2016 நவம்பரில் இந்த அனுமதியை வழங்கி இருந்தால், ஜனவரியில் அகழாய்வை தொடங்கி இருக்கலாம். தாமதமாக அனுமதி வழங்கினாலும், செப்டம்பர் வரை அவகாசம் தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அகழாய்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டதும், நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று அகழாய்வு பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: