கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு!

கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு!

கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு கீழடியில் நடந்து வருகிறது. கடந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட உறை கிணற்றை விட, அதிக சுற்றளவு கொண்ட, ஆறு அடுக்குகள் உறை கிணறு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய மூன்று அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறுகளை விட, இதன் அகலம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் உள்ளது. இந்த உறைகிணறு ஆற்றின் அருகாமையில் இருந்திருக்க கூடும்.

வயதான பெண்கள் அணியும் தங்க தொங்கட்டான், தங்க காசுகள் உள்ளிட்ட, 2,௦௦௦ பொருட்கள் தற்போதைய அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வுக்கு பின், இந்த பொருட்கள் எந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது, என தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: