அழகன்குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா?

அழகன் குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா?

அழகன் குளம் அகழாய்வுக்கு நிதி ஒதுக்கப்படுமா?

‘அழகன்குளத்தில், அகழாய்வு செய்ய, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்’ என, கடந்த ஆண்டு, செப்., 1ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், அறிவித்தார். இன்னும், அத்தொகை ஒதுக்கப்படாததால், அகழாய்வு துவங்கவில்லை. இந்த நிதியாண்டு முடிவதற்குள், தமிழக அரசு, நிதி ஒதுக்குமா என்ற எதிர்பார்ப்பில், தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கடந்த, 2016, செப்., 1 ம் தேதி, தமிழக சட்டசபையில், சுற்றுலா, கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை, 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

அப்போது, ‘ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில், இந்த ஆண்டு ஒரு விரிவான தொல்லியல் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும்’ என்றார். அவர் அறிவித்த நிதியாண்டு, இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அகழாய்வுக்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. ராமநாதபுரத்தின் கிழக்கே, 17 கி.மீ., தொலைவில், வைகை ஆற்றின் வட கரையில், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, அழகன்குளம் கிராமம்.

இது, கி.மு., 2ம் நுாற்றாண்டு முதல், கி.பி., 2ம் நுாற்றாண்டு வரையிலான கால கட்டத்தில், ரோமானியர்களுக்கான, தமிழகத்தின் முக்கிய துறைமுகமாக திகழ்ந்தது. அப்பகுதியில், வணிகம் நடைபெற்றதற்கான சான்றுகள், சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. கடந்த, 1984ம் ஆண்டு முதல், இதுவரை, 24 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடந்துள்ளன. அதில் கிடைத்த தொல் பொருட்களின் வழியே பண்டைய தமிழர்களின் சமூக, பண்பாட்டு செயல்பாடுகள் தெரிய வந்துள்ளன. தற்போது, தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘தமிழக அரசு, இந்த நிதி ஆண்டுக்குள், அகழாய்வுக்கான நிதியை ஒதுக்கினால், அகழாய்வை துவக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் உள்ளோம்’ என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>