கர்ம வீரர் காமராசர் ஆட்சியால் தமிழர்களுக்கு என்ன பயன்?

கர்ம வீரர் காமராசர் ஆட்சியால் தமிழர்களுக்கு என்ன பயன்?

கர்ம வீரர் காமராசர் ஆட்சியால் தமிழர்களுக்கு என்ன பயன்?

நன்மைகள்:

1953ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை முறியடித்த தமிழர் காமராசர். முதல்வரான பிறகு காமராசர் தமிழகமெங்கும் கல்விக்கூடங்களை திறந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்தார்.

காமராசர் ஆட்சியின் போது கட்டிய அணைகள்:

1. கீழ்பவானி,
2. மணிமுத்தாறு,
3. காவிரி டெல்டா,
4. ஆரணியாறு,
5. வைகை நீர்த்தேக்கம்,
6. அமராவதி (அணை),
7. சாத்தனூர் (டாம்),
8. கிருஷ்ணகிரி,
9. புள்ளம்பாடி,
10. வீடூர் அணைத்தேக்கம்,
11. பரம்பிக்குளம்,
12. நெய்யாறு – போன்றவைகளாகும்.

காமராசர் ஆட்சியின் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் :

1) 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம்,
2) 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம்,
3) 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம்,
4) 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சாரம் உபரியாகக் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம்.

அந்த வகையில் தமிழர்கள் அவருக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

தீமைகள் :

ஆனால், காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம்.

காமராசரைச் சுற்றியிருந்தவர்கள் ஏழை குப்பனோ சுப்பனோ அல்ல. மிட்டா மிராசுகளும் ஆலைய அதிபர்களும் தான்.

கட்சியில் செல்வாக்கு செலுத்திய ஏழைப் பங்காளர்கள் பட்டியல் இதோ!

  • கபிஸ்தலம் மூப்பனார்
  • ஸ்ரீரங்கம் வெங்கடேச தீட்சிதர்
  • கல்வண்டார் கோட்டை சாமிநாதன்
  • வெண்மனி கொலைகாரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
  • பக்கிரிசாமி நாயுடு
  • மதுரை சின்னக் கருப்பத் தேவர்
  • கவரப்பட்டு மாரியப்ப வாண்டையார்
  • கருப்பு அம்பலம் வெங்கடாசலத்தேவர்
  • ஜெகவீரபாண்டிய நாடார்
  • கும்பகோணம் ஏ ஆர் ராமசாமி
  • காளியண்ணன் கவுண்டர்
  • ராமசாமி கவுண்டர்
  • பொள்ளாச்சி மகாலிங்கம்
  • இராஜாராம் நாயுடு
  • என்.ஆர்.தியாகராசன்

நீண்டு விடும். நிறுத்திக் கொள்வோம்.

ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இவர்கள். கடத்தல் பேர்வழிகளும் கள்ள நோட்டுக்காரர்களும் பிளாக் மார்க்கெட் பேர்வழிகள் தான் காமராசரின் பொற்கால ஆட்சியின் புரவலர்கள்.

காமராசர் கட்சியில் உண்மையான ஏழைப் பங்காளர்கள் என சொன்னால், கக்கன், பரமேஸ்வரன்கள் என மிகச் சிலரே!

கர்ம வீரரின் ஆட்சியில் தானே எல்லைப் பகுதிகளை இழந்தோம்.

  • தேவிகுளம்
  • பிர் மேடு
  • நெய்யாற்றங்கரை
  • நெடுமங்காடு
  • பாலக்காடு
  • சித்தூர்
  • திருப்பதி
  • மூணாறு

போன்ற பகுதிகளை இழந்தது காமராசர் ஆட்சியில்.

தெற்கெல்லைப் போரிலும், வடக்கெல்லைப் போரிலும் ஈடுபட்ட மார்சல் நேசமணி, ம.பொ.சி. ஆகியோர் காமராசரின் அலட்சியப் போக்கை கடுமையாகவே கண்டனம் செய்துள்ளனர். அது மட்டுமல்ல. எல்லைப் போராட்டத்தின் இரத்தஞ் செறிந்த வரலாறு சொல்லும் காமராசரின் கருணை மிகு ஆட்சியைப் பற்றி.

திருவிதாங்கூரில் தமிழ் பேசுகின்ற வட்டங்கள் தேவிகுளம், பீர்மேடு நீங்கலாக 01.11.1956 முதல் தாய்த் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. அதற்கு முன்னரே தமிழர்கள் நேசமணி தலைமையில் தமிழர் தாயகப் பகுதிகளை மீட்பதற்கு மிகத் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது காமராசர் மலையாள காங்கிரசுக்கு பரிந்து பேசுவதற்காக நேசமணியை அணுகிப் பேசினார். இது குறித்து நேசமணி விளக்குகிறார்: “தாங்கள் போராட்டங்களை கை விட்டு விட்டு, மலையாள காங்கிரசான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள். திருவிதாங்கூர் உள்ளே ஒரு தமிழ்மாவட்டத்தை அமைத்து பிரச்னையை முடித்துக் கொள்வது தான் நல்லது. ஆனால் காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது”. (A. Nesamani – Inside Travancore Tamil nadu)

திருவிதாங்கூர் தமிழர்கள் நிலைமையை நேரில் கண்டும் தமிழ்பகுதிகளைக் கொண்டு ஒரு வருவாய் கோட்டம் அமைத்து மலையாளிகளிடம் சேர்ந்து வாழச் சொன்னாரே தவிர, தாய் தமிழகத்துடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சொல்ல மனம் வரவில்லை. தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் குறித்து எதுவும் சொல்லாமலே காமராசர் இருட்டடிப்பு செய்துவிட்டார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

சென்னை மாகாணத்தில் காமராசரின் தலைமையின் கீழ் இயங்கிய ம.பொ.சி. அவர்கள் தனது சுயசரிதை நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “முதல்வர் காமராசரை சந்தித்து தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிரதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டாம் தாணுவின் ஆட்சி நடத்தும் அடக்குமுறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். திரு.காமராசர் எனக்கு நம்பிக்கை தரும் வகையில் பதிலளிக்க வில்லை. தெற்கெல்லை கிளர்ச்சி காரணமாகத்தான் இவ்வளவு நேர்ந்ததென்றும், அது தேவையற்ற கிளர்ச்சி என்றும் அவர் கூறினார்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு காங்கிரசுக்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவே இல்லை.” (ம.பொ.சி- எனது போராட்டம்)

1952ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் தான் ஆந்திரர்கள் ‘மதராஸ் மனதே’ என்று முழக்கமிட்டனர். அப்போது காமராசர் வாய்மூடி மெளனம் காத்தார்.

“சென்னை மீட்பில் காமராசரின் மவுனத்தைக் கண்டு ஆந்திரராகிய என்.சஞ்சீவி ரெட்டியார், “காமராசரின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது. மற்ற தலைவர்களும் அவரை பின்பற்ற வேண்டும்” என்று அறிக்கை விட்டார். (ம.பொ.சி- எனது போராட்டம்)

  • 1956இல் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உண்ணாநிலை நடத்தி உயிர்நீத்தார். நேருவின் கூட்டாளியான காமராசர் நினைத்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாடு பெயர் மாற்றக்கூடாது என்கிற பிடிவாதமே சங்கரலிங்கனாரின் உயிரைக் குடித்தது.
  • 44 அப்பாவி தலித் கூலி விவசாயிகளைப் படுகொலை செய்த வெண்மணி கொலைகாரக் கும்பலுக்கு எதிராக காமராசர் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
  • இரிஞ்சூர் கோபால கிருஷ்ணனை பாதுகாத்தவர் காமராசரின் செல்லப் பிள்ளை கருப்பையா மூப்பனார். காமராசர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?
  • 1974 கச்சத் தீவை தாரை வார்க்கும் போது கர்ம வீரர் என்ன போராட்டம் நடத்தினார்? அப்போது அவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர். கச்சத் தீவிற்காக என்ன செய்தார்?
  • 1957 சனவரி வால்பாறை படுகொலை . கூலி உயர்வு கேட்ட எஸ்டேட் தொழிலாளர்களை சுட் க் கொன்றது யாருடைய ஆட்சியில் . பெருந்தலைவரின் ஆட்சியில் தானே.
  • வாட்டாக்குடி இரணியனும் சிவராமனும் களப்பால் குப்புவும் படுகொலை செய்யப்பட்ட போது காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் என்ன செய்தார்?
  • காங்கிரஸ் காமராசர் ஆட்சியிலே கம்யூனிஸ்டுகள் மீதான அடக்கு முறை தலை விரித்தாடியது.
  • தஞ்சை விவசாயக் கூலிகளின் இரத்தமும் சதையும் சொல்லும் பண்ணையார்களின் பாதுகாவலர் யார் என்று? ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிருக்கிறது.
  • செட்டிநாட்டரசர் முத்தைய செட்டியாரையும், அவர் கொடுத்த காரையும் மறக்க முடியுமா?

1960ஆம் ஆண்டு உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை கொண்டு வர கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் முயன்றார். அதற்கு காமராசர் பெரும் முட்டுக்கட்டை போட்டார்.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரிலும் தில்லிக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இவரின் நிழல் முதல்வர் பக்தவத்சலம் மாணவர்களை கொன்றொழித்த போது கண்டித்திடவும் மறுத்தார்.

5000 ஏக்கர் நிலத்தை வைத்திருந்த பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் காமராசர் அமைச்சரவையில் அமைச்சர்.

காமராசரோ காங்கிரஸ் கட்சியோ சோசலிஸ்டோ சோசலிச கட்சியோ இல்லை. ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சியின் தலைவர் தான் காமராசர் என்பது தலித்துகளுக்கு தெரியும். ஆனால், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை ஆதிதிராவிடர் தெருக்களிலேயே தொடங்குவதில் அவர் காட்டிய முனைப்பை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

  • பல நண்பர்களின் எழுத்துக்கள் எடுத்து கையாளப்பட்டுள்ளது.
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>