செஞ்சி அருகே சாதவாகனர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு!

செஞ்சி அருகே சாதவாகனர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு!

செஞ்சி அருகே சாதவாகனர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு!

செஞ்சி அருகே, சங்கராபரணி ஆற்றங்கரையில், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சாதவாகனர் கால நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட் டம், செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், தலைவர் இராசாதேசிங்கம், செயலர் முனுசாமி ஆகியோர், செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் கிராம சங்கராபரணி ஆற்றங்கரையில் தொல்லியல் கள ஆய்வு செய்து, செப்பு நாணயம் ஒன்றை கண்டெடுத்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சங்கராபரணி ஆற்றங்கரையில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட செப்பு நாணயம், 2.130 கிராம் எடை, 15 மி.மீ., குறுக்களவுடன், ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் உள்ளது. நாணயத்தின் ஒருபுறம் யானை ஒன்று, இடது புறம் நோக்கி தன் துதிக்கையை தொங்கவிட்டபடி கம்பீரமாக நடந்து செல்வது போன்று புடைப்புச் சிற்பம் உள்ளது. யானையின் கால்களுக்கு இடையில் ஸ்ரீவஸ்தவம் என்னும் மங்கலச் சின்னம் உள்ளது. யானையின் மீது ஒரு மனிதன் அமர்ந்த நிலையிலோ, யானையின் பின்புறம் ஒரு மரமோ, வெண்கொற்றக் குடையோ சிதைந்த நிலையில் உள்ளது. யானைக்கு மேல் வெற்றிடமாக உள்ள வலப்பகுதில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்டுள்ளன. அவை முற்றிலும் சிதைந்துள்ளன. நாணயத்தின் மறுபுறத்தில் மூன்று முகடுகள் உள்ள மலையும், மலை உச்சியில் பிறை சந்திரன், சூரியனும் உள்ளன. நாணயத்தின் கீழ் விளிம்பையொட்டி மலைக்கு அடியில் ஆறு ஓடுவதுபோல் காணப்படுகிறது. இந்த நாணயம், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன அரசர்களால் வெளியிடப்பட்டது என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வாளர்கள் லெனின், முனுசாமி ஆகியோர் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: