விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு மதுரைகொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழனின் 50-வது ஆட்சியாண்டான கி.பி. 963-ல் பொறிக்கப்பட்டதாகும். சோழர்கால கல்வெட்டான இந்த கல்வெட்டு சமண பள்ளிக்கு கொடை கொடுத்ததை தெரிவிக்கிறது. சிங்கபுர நாட்டு மீவழி மலையனூரை சேர்ந்த நல்லூழார் கரைமாந்தன்காரி, நீலங்காரி, அவன் தம்பி தேருமான் விமாச்சி, மலையகுட்டி ஆகிய நால்வர் மேல்மலைப்பள்ளி தேவர் என்ற சமண கடவுளுக்கு தினமும் பூஜை, படையல் செய்வதற்காக அவர்களுடைய நிலமாகிய மாந்தோட்டத்தின் மேற்கே உள்ள ஏற்றம், பெய்த்தியொட்டை கழுவல் என்னும் வயல் ஆகியவை கொடையாக கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும் 1,055 வருடங்களுக்கு முன்பு இருந்து மலையனூர் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டதையும், அங்கு சமண கோவில் இருந்ததையும் இக்கல்வெட்டு முலம் அறிய முடிகிறது.

கல்வெட்டு அருகே சமண கோவில் ஒன்றும் உள்ளது. இந்த இடமும் ஆயிரம் ஆண்டுகளாக சமண கோவிலுக்கு சொந்தமாக தற்போதும் இருந்து வருகிறது. செஞ்சியை சுற்றிலும் சமணப் படுக்கைகளும், சிற்பங்களும், கோவில்களும், சின்னங்களும் சங்க காலம் முதல்கொண்டே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: