சென்னை மருத்துவக்கல்லூரியில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கல்வெட்டை திறந்து வைத்ததுடன் புராதன சின்னமான ஆனைப்புலி பெருக்கமரத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கல்வெட்டில் ஆனைப்புலி பெருக்க மரத்தின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்புகள்?

*ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த ஆனைப்புலி பெருக்க மரம் உலகின் பழமையான மரங்களில் ஒன்று.

*பொந்தன்புளி அல்லது ஆனைப்புலி பெருக்கமரம் எனப்படும் மரம் பல நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

*சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பெருக்கமரம் 37 அடி சுற்றளவு கொண்டது. இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே பெருக்கமரம் உள்ளது.

இதையடுத்து சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, செப்டம்பர் இறுதி வாரம் கடைபிடிக்கப்படும் உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு தேசிய காது கேளாமை வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: