கீழடி நாகரிகம் கி.மு. 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என அமெரிக்காவில் நடந்த கார்பன் பகுப்பாய்வில் தகவல்!

கீழடி நாகரிகம் கி.மு. 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என கார்பன் பகுப்பாய்வில் தகவல்!

கீழடி நாகரிகம் கி.மு. 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என கார்பன் பகுப்பாய்வில் தகவல்!

கீழடி நகர நாகரிகம், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, அமெரிக்காவில் செய்யப்பட்ட, கார்பன் பகுப்பாய்வின் மூலம், தெரிய வந்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில், 2014 முதல், இரு கட்டங்களாக, மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. அதில், 5,800 தொல் பொருட்கள் கிடைத்தன. அவற்றில், 1.95 மீட்டர் ஆழத்தில் கிடைத்த, கட்டட தொல் பொருட்களில் இருந்து, இரு கரிமப் பொருட்கள், அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்திற்கு, பரிசோதனைக்கு அனுப்பட்டன. அங்குள்ள, ‘பீட்டா’ பகுப்பாய்வு கூடத்தில், கார்பன் பகுப்பாய்வு சோதனை நடந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதன் முடிவுகள், தற்போது வெளியாகி உள்ளன. அதில், கீழடி கரிமப் பொருட்கள், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டை சேர்ந்தவை என, தெரிய வந்துள்ளது. இதனால், கீழடி நகர நாகரிகத்திற்கான காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு பிரிவின் தலைவர், அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது :

கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான நிதி கிடைத்த உடன், நில உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற்று, அகழாய்வு பணிகள் துவக்கப்படும். மார்ச் இரண்டாம் வாரத்தில், பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: