திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய 134 பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு!

திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய 134 பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு!

திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய 134 பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு!

திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய, பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, விவசாயி ஜோதி, 2015 பிப்., 9ல், தன் விவசாய நிலத்தில், வாழைக்கன்று நடுவதற்காக குழிகளை தோண்டினார். அப்போது, குழிகளுக்குள் சிறிய அளவில், 134 கற்குண்டுகள் கிடைத்தன.வருவாய்த் துறையினர் கற்குண்டுகளை கைப்பற்றி, திருவண்ணாமலை அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்நிலையில், ‘கற்குண்டுகளை வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் வைத்து ஆய்வு செய்து, பாதுகாக்க வேண்டும்’ என, மாநில அரசு அருங்காட்சியக இயக்குனர் உத்தரவிட்டார். இதையடுத்து, 134 கற்குண்டுகளை செங்கம் தாசில்தார் நேற்று முன்தினம், வேலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளரிடம் ஒப்படைத்தார்.

கற்குண்டுகள், 200 ஆண்டுகள் பழமையானது. இவை, 18ம் நுாற்றாண்டில் திப்பு சுல்தான் காலத்தில், பீரங்கியில் குண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்குண்டும், 350 கிராம் எடை உள்ளது. கோட்டை கதவுகளை உடைக்கவும், எதிரி படைகளை முன்னேறவிடாமல் தடுக்கவும், இவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு வேலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: