கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையின் 5 ம் கட்ட அகழாய்வில் வட்டப் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை, அகழாய்வு பகுதியில் பத்து அடி சதுர வடிவத்தில் குழி தோண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு பதினைந்து தொல்லியல் குழிகள் தோண்டப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக இரட்டைச் சுவர் மற்றும் பல்வேறு வடிவிலான பானைகள் கிடைத்து வருகின்றன.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

இதன் தொடர்ச்சியாக குழி தோண்டும் போது வட்டவடிவிலான தாழி கிடைத்தள்ளது. கண்டெடுக்கப்பட்ட வட்டப் பானையை காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 5-ம் கட்ட அகழாய்வு நடக்கிறது. ஏழு குழிகள் தோண்டப்பட்டு நடந்த பணிகளில் இரட்டைச்சுவர்கள், வட்டப்பானை, மண்பானை, பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. வட்டப்பானை கடந்த 4ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பானைகளை விட வித்தியாசமாக உள்ளது. இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து ஏராளமானவர்கள் வட்டப்பானையை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: