ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!

ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!

ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!

‘தொன்மையான ஆனுார் கிராமத்தில், முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பு வேலி அமைத்து, பராமரிக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுாரில் பழமையான அஸ்திரபுரிஸ்வரர் கோவில், வேதநாராயண பெருமாள் கோவில், முருகன் கோவில் உள்ளன. இவற்றுடன் மிக பழமையான, 2,000 ஆண்டுக்கு மேற்பட்ட சங்க கால பொக்கிஷமாக, முதுமக்கள் தாழிகளும் உள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இந்த முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறையினர், மேம்போக்காக பராமரித்து வருகின்றனர். பாதுகாவலர்கள், பாதுகாப்பு வேலி என, எதுவும் கிடையாது. பழங்கால சின்னங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கும், இரும்பு பலகையில் அறிவிப்பு மட்டுமே வைத்துள்ளனர். அந்த அறிவிப்பு பலகைகளும், இயற்கை சீற்றம், சமூக விரோத கும்பல்களின் சேட்டைகளால், உருக்குலைந்து காணப்படுகிறது.

முதுமக்கள் தாழிகள் அமைந்துள்ள பகுதி, சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்குள்ள முதுமக்கள் தாழி சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து கவனத்தில் ஈர்க்கும் விதத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>