முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறியதாவது: முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சமீபத்தில் மிக பழமையான மூலிகை ஓவியம் மற்றும் நாயக்கர் காலத்திய சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மண்பறை கிராமத்தில் முசிறிக்கு செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் முற்கால மக்கள் வாழ்ந்த பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இங்கு களஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள், மண்பாண்ட ஓடுகள் மற்றும் ஆலயத்திற்கு தேவதானமாக வழங்கப்பட்ட 50 நில எல்லையை குறிப்பிடும் சூலக்கல் நாற்புறம் திரிசூலம் பொறித்த நிலையில் இங்கு காணப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மன்னர்கள் காலத்தில் கோயில்களுக்கு தேவதானமாக வழங்கப்படும் நிலங்களில் வைணவ கோயில்களுக்கு சங்குசக்கரம் பொறிக்கப்பட்ட கல்லும், சைவ கோயில்களுக்கு திரிசூலம் பொறிக்கப்பட்ட கல்லும் நடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இங்கு காணப்படும் சூலக்கல் இந்த வகையை சேர்ந்ததாகும். இக்கல் அமைந்துள்ள சற்று தொலைவில் சிவலிங்கம் ஒன்று பாறையில் வைக்கப்ட்டிருந்த பீடத்தின் அடிதளம் ஒன்றும் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் அதிகளவு படிவுபாறைகளும் அவற்றின் சிதைவுகளும் காணப்படுகின்றன. முற்காலத்தில் இப்பகுதி கடல்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

இன்றும் இப்பகுதி மக்களின் நிலங்களில் உழவுபணி மேற்கொள்ளும்போது நிறைய மண்பாண்டங்களும், ஓடுகள், ஜாடிகள் கிடைத்தாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இப்பகுதிகளில் மேற்கொண்டு ஆய்வுகள் செய்தால் தமிழர்களின் மறைந்த முற்கால நாகரீகம் வெளிச்சத்திற்கு வரும். இங்கு கண்டறியப்பட்ட மண்பாண்டங்கள் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். மேலும் இங்கு முற்காலத்தில் வழிபாட்டிற்கு மக்கள் பயன்படுத்திய 12 ராசிகளை குறிக்கும் கல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>