உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!

உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!

உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!

ஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில்

அம்மா -வை, “அம்மே”
அப்பா-வை, “அப்பே”

என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது.

பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை திரு என்றும், காய்ந்ததை சுக்கு என்றும் சொல்வதை அறிந்து தமிழ்மொழியின் தாக்கம் பூட்டானியர் மொழியிலும் இருப்பதை காணக்கூடியதே.

மொழியியல் நிலையில் தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் ஓப்பிட்டு ஆய்வு செய்த பேராசிரியர் ஓனோ 500 ஒப்புநிலைச் சொற்களை த் தந்துள்ளார். அவற்றுள் பயிர்த் தொழிலுடன் தொடர்புடைய 27 சொற்களையும் சிறப்பாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறார். சில வார்த்தைகள்

பொங்கல் = FONKARA

பூ = FO

நெல் = NI

தினை = SINAI

சேறு = SIRO

அணை = ANA

தமிழரைப் போன்று ஜப்பானியரும் புத்தாண்டு அன்று FONKARA FONKARA என்று கூறி ஆரவாரம் செய்து வீட்டைச் சுற்றி வரும் வழக்கம் இருக்கிறது. புத்தாண்டுக்கு முதல் நாள் “TONDOYAKI ” என்ற சடங்காக பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவார்கள். வெடி வெடிப்பார்கள். புத்தாண்டு அன்று தோரணம் கட்டி புத்தாண்டில் புது நீர் அள்ளுவது, AZUKI என்ற பருப்பை பச்சரிசியுடன் சேர்த்து சமைத்த உணவை தயாரித்தல் , MOCHI என்ற அரிசி கேக்கை காகத்திற்கு உணவிடுதல் ஆகிய சடங்குகள் நடைபெறும்.

இதுதோடு மட்டுமல்ல ஆசியாவில் உள்ள தாய்லாந்து (தாய் – என்பதே தமிழ் தானே), கம்போடியா என தமிழ், உலகின் பல நாட்டு மொழிகளில் ஐக்கியமாகி இருக்கிறது.

தமிழர் நாம் பெருமை கொள்வோம்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>