கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆநிரை மீட்ட வீரனுக்கான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் ஆகியோர் கூறியதாவது: பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள இவ்வூரில் பழைமையான நெமிலியம்மன் கோயில் அமைந்துள்ளது. நெமிலியம்மன் குன்று என்றழைக்கப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்லும் காட்டுப்பாதையின் ஓரமாகக் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் அருகே 4 அடி அகலமும், மூன்றரை அடி உயரமும் கொண்ட பழைமையான நடுகல்லாக இது உள்ளது. நடுகல்லின் ஓரங்கள் சற்று சிதிலமடைந்துள்ளன. இந்நடுகல்லில் வீரனது வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனது மார்பிலும், வயிற்றிலும் அம்புகள் பாய்ந்தபடி உள்ளது. இது வீரன் எவ்வாறு இறந்தான் என்பதைக் காட்டுகின்றது. வீரனது இடப்பக்கத்தில் காளை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இது வீரன் எதற்காகப் போரிட்டான் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


பண்டைத் தமிழ் இலக்கண நூல்களில் சுட்டப்படும் புறத்திணைகளில் ஆநிரை கவர்தல், மீட்டல் குறித்தப் போர்முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் எச்சமாக இந்நடுகல் அமைந்துள்ளது.

இந்நடுகல்லானது இப்பகுதியில் நிகழ்ந்த ஆநிரை மீட்டலில் போரிட்டு உயிர்துறந்த வீரனுக்காக எடுக்கப்பட்டதாகும். கல்லின் அமைப்பும் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடும், உருவ அமைப்பையும் பார்க்கும் காலத்தால் பழைமையானதாகத் தெரிகிறது. இந்நடுகல் பிற்காலச் சோழர்காலமான நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்நடுகல்லுக்கு அருகில் இரண்டு பெரிய கல் உரல்கள் காணப்படுகின்றன. இந்த உரல்களை மக்கள் தோணி உரல்’ என்று அழைக்கின்றனர். அவற்றில் ஒரு உரலில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அவ்வெழுத்துகள் இனங்கான இயலாவண்ணம் உள்ளன. இவ்வூரில் பழைமையான நெமிலியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விழாவில் எருமைக் கன்றைப் பலியிடுவது வழக்கமாக உள்ளது. இவ்வூரார் இந்நடுகல்லினை எருமைக்கல், நெமிலியம்மன் கல் என்று அழைக்கின்றனர் என்றனர்.

இந்த நடுகல் குறித்து, மேனாள் தொல்லியல் துறை உதவி இயக்குநர் இரா.பூங்குன்றன் கூறுகையில், இந்நடுகல் ஆநிரை மீட்புப் போரில் உயிர்துறந்த வீரனுக்கான நடுகல்லாகும். இக்கல்லின் அமைப்பினைப் பார்க்கும் போது கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இவ்வட்டார வரலாற்றினை உணர்த்தும் வகையில் இந்நடுகல் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: