நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

கொங்கு நாட்டின் பகுதியாக வரலாறு முழுவதும் இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.

பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு “பாரமஹால் மற்றும் சேலம்” மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டே பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலகாட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து ‘நாமக்கல்’ மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கனிவளம்:

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல் கிடைக்கின்றது. இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இது பயன்படுகிறது. நாமக்கல் வட்டத்தில் ‘கல்நார்’ கிடைக்கிறது.

வேளாண்மை:

காவிரியின் முக்கிய துணையாறான சரபங்க நதி, திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள பல ஏரிகளை நிரப்புகிறது. இதன் முலம் இப்பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. நாமக்கல், திருச்செங்கோடு வட்டங்களில் மண்வளம், பெரும்பாலும் செம்மண் நிலமாகவே அமைந்துள்ளது. சிற்சில பகுதிகளில் சிறிதளவு கருமண் நிலம் அமைந்துள்ளது. மோகனுர், பரமத்தி, கபிலர் மலை ஆகிய பகுதிகள் காவிரி நீர்ப்பாசனம் பெறுகின்றன.

கொல்லிமலைப் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பகுதிகள் ஆற்றுப் பாசன வசதியைப் பெற்றுள்ளன. ஏனைய பகுதிகள் பெரும்பாலும் நீர்ப்பாசனத்திற்கு மழையை நோக்கியுள்ளன. நாமக்கல் வேளாண்மைப் பிரிவு நிலப்பகுதிகளில் நெல், கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி ஆகியவை பயிரிடப்படுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


தொழில்கள்:

மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.

லாரி பாடி கட்டுதல்:

நாமக்கல், தற்போது லாரி பாடி கட்டுதல், டிரக்குகள், டாங்கர் லாரி ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளின் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. நாமக்கல்லில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் இத் தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கிறது. நாமக்கல் நகரத்திற்கு எப்போது சென்றாலும் சுமார் ஒரு லட்சம் லாரிகள், ஏறத்தாழ 2000 சமையல் எரிவாயு லாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான டிரெய்லர்கள் மொய்த்துக் கிடப்பதை காணலாம். இத்தொழில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15% பேருக்கு தொழில் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

நாமக்கல்லின் இந்த வெற்றி சாதனையின் ஆரம்பம் 1942இல்தான். வறட்சியினால் விவசாயம் கேள்விக்குறியானபோது மக்கள் வயிற்றுப் பிழைப்பிற்கான மாற்று வழியாக லாரி போக்குவரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இதில் ஏற்பட்ட பயிற்சியும், தோய்வும் 1960களில் லாரி பாடி கட்டும் தொழிலுக்கு வித்திட்டன. இன்றைய இந்த வளர்ச்சியின் பின்னணியில் நாமக்கல் பாடி கட்டும் தொழில் வளர்கிறது.

மலைக்கோட்டை:

மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் – திருச்சி, சங்ககிரி, துறையூர், சேலம் முதலிய ஊர்களுக்குச் செல்வதற்குரிய வழிகள் – சாலைகள் – கூடுமிடமாய்த் திகழ்கிறது. இந்நகரின் நடுவே, நகருக்குச் சிறப்பினைத் தரும் மலைக்கோட்டை அமைந்திருக்கின்றது. நாமக்கல் மலை ஒரே பாறையால், பிளவற்றதாய் விளங்குகிறது. இம்மலையின் மீது ஏறுவதற்கு ஏற்பச் சற்று சரிவாக வடக்கு, தெற்குப் பகுதிகள் அமைந்துள்ளன. ஆனால், கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் செங்குத்தாக அமைந்திருக்கின்றன.

தென் பகுதியில் மலையின் மேல் ஏறுவதற்குச் சரிவின் மீது படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இப்படிகள் முறையே தென்மேற்குப் பாகத்தின் வழியாய்ச் சென்று இறுதியில் தெற்குப் பகுதியின் மேலே மலைக் கோட்டையை அடைகின்றன. தென்மேற்குப் பகுதிகளில் சில மதில்கள் உள்ளன. அவை கோட்டை ஏற்படுவதற்கு முன்பே அமைந்திருந்த பழைய கோட்டையின் மதில்களின் சிதைவாகக் கருதப்படுகின்றன. கோட்டையின் மேல்பகுதியில் மழைநீர் தங்கியிருப்பதற்காகப் பாழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவை கோட்டைக்குள் இருப்போருக்குப் பயன்படுகின்றன.

கீழ்ப்பாதியில் கோடைக் காலத்திலே கூட நீர் நிறைந்திருக்கும். இதனையன்றிக் கோட்டையின் தென் பகுதியிலும் சில பாழிகள் உள்ளன. கோட்டையின் வடக்குப் பகுதியில் இரகசிய வழி ஒன்று உள்ளது. இது, பண்டைக் காலத்தில் ஆபத்து ஏற்பட்டபோது தப்பிச் செல்வதற்காக ஏற்பட்டதாகும். இக் கோட்டையினுள் மிக அழகிய திருமால் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் மட்டுமின்றி, பண்டைச் சின்னம் உள்ள ஒரு கட்டடமும் காணப்படுகிறது. இம்மலைக் கோட்டை மிகவும் வேலைப்பாடு உள்ளதாய் காணப்படுகிறது. உட்பகுதிகள் வீரர்கள் தங்குவதற்குரிய இடம்போல் அமைந்திருக்கிறது.

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

கமலாலயம்:

இங்குக் கண்ணறைகள் பல உள்ளன. அவ்வறைகளின் வழியாக வீரர்கள், பகைவர்களைப் பார்த்து அறிவதற்குரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றோடு நில அறைகளும் உள்ளன. பாறைகளில் சிற்சில குழிகள் காணப்படுகின்றன. அவற்றில் தண்ணீர் தேங்கி இருக்கும். அந்நீரில் நீராடினால் நலம் பயக்கும் என்று அதில் பலர் நிராடுவது உண்டு. அக்குழிகளில் ஒன்று பெரிய குளம் போல அமைந்திருக்கிறது. அக்குளத்தைக் ‘கமலாலயம்’ என்று கூறுவார்கள். அதிலுள்ள நீரைக் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர்.

அதன் அருகில் நீராழி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டைப் பகுதிகள் மைசூர் அரசர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, ‘வுட்’ என்னும் ஆங்கிலத் தளபதி ஹைதர்அலியிடமிருந்து இதைக் கைப்பற்றினார் என்றும், ஆனால் மீண்டும் ஹைதர் அலியே இக்கோட்டையைத் திரும்பப் பெற்றுவிட்டார் என்றும் ஆங்கில ஆட்சிக்காலத்தில் இந்தியச் சிப்பாய்கள் இங்கே இருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றன. இக்கோட்டையின் வரலாறு எவ்வாறாயினும், பண்டைக்காலச் சின்னங்களுக்கு இம்மலைக் கோட்டை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அதியேந்திர விஷ்ணுகோயில்:

நாமக்கல் மலையின் மேற்குப் பக்கம் ஒரு குகைக் கோயில் உள்ளது. இக்குகைக் கோயிலில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியுள்ளார். வடக்குச் சுவரில் வைகுந்தநாதரின் நரசிம்ம அவதாரமும், தெற்குச் சுவரில் வாமன திருவிக்ரம அவதாரமும் காணப்படுகின்றன. கிழக்குப் பக்கத்தில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இம்மலையின் பாதி வழியில் வடபால் அனந்தாச்சாரி விஷ்ணு குகையுண்டு. இக்குகைக் கோயிலில் வாமன அவதாரமும், கேவல நரசிம்மன், விக்கிரம அவதாரம், சங்கர நரசிம்ம அவதாரம் முதலிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன.

இங்கு பெருமாள், கார்கோடகன் என்னும் திருநாமத்தில் தெற்கில் தலையும், வடக்கே கால் நீட்டியும் பள்ளிகொண்டு திருச்சேவை சாதிக்கிறார். இவ்விரு குகைக் கோயில்களும் அதியகுலத் தோன்றல் குணசீலன் என்று பட்டம் சூடி ஒருவனால்அமைக்கப்பட்டவை எனத் தெரிகிறது. கொங்குமண்டல சதகம் இக்கோயிலைக் கட்டியவன் அதியமான் என்பதை, செங்குன்றுர் என்னும் பழைய பெயர் காலப்போக்கில் செங்கோடு – திருச்செங்கோடு என வழங்கப்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலுள்ளது. திருச்செங்கோட்டில் நூற்பு ஆலைகள் அதிகம். இங்கு முதலியார் வகுப்பினர் அதிகமாக வாழ்கின்றனர்.

திருச்செங்கோடு மலை, சங்ககிரி இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ. தொலைவுள்ளது. இம்மலை மீது ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படிக்கட்டுப் பாதையில்ஏறிச் செல்லும்போது கணக்கில்லாத குரங்குகள் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் காணலாம். இப்படிக் கட்டுப் பாதையில் இடையிடையே இளைப்பாறுவதற்காக மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் ஏற்றம் ஏறிச் சரிவில் இறங்கியதும் அடுத்துள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ள படிகளின் இருமருங்கும் பக்கத்துகொன்றாக இருபதடி உயரமான பாம்பின் உருவம் சிவலிங்கத்தை உடலில் தாங்கி, ஐந்து தலையாலும் குடைபிடித்துக் கொண்டு இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மலைமீது ஏறிச்சென்றால் பல ஊற்றுக்கள் நீர் சுரந்து பள்ளத்தில் தேங்கி நிற்பதைக் காணலாம். இம்மலைமீது சிவபெருமான் மாதொருபாகனாக காட்சியளிக்கிறான். இக்கடவுள் வடமொழியில் அர்த்தநாரீஸ்வரன் என்று அழைக்கின்றனர்.

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை!

மலையின் மேல் திருக்கோயிலுக்குக் கீழ்ப்பாகத்தில் உள்ள சிகரத்திற்கு செல்லும் முன் உள்ள ஒரு குகை வடிவில் உள்ள பாறையிடுக்கு இருக்கிறது. அதையடுத்து உள்ளது குமர தீர்த்தம். திருச்செங்கோட்டு மலையின் பெயரே ஊருக்கும் அமைந்துள்ளது. ஊரின் நடுவில் உள்ள கைலாசநாதரை ‘நல்ல தம்பிரான்’ என்றும், மலைமேல் உள்ள அர்த்தநாரீசுவரரை ‘மலைத் தம்பிரான்’ என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

கைலாசநாதர் கோயிலிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் மலையின் அடிவாரம் உள்ளது. மலைமீதுள்ள திருக்கோயில் ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுரவாயிலை விட்டு இறங்கியதும் திருச்சந்நிதியில் திருக்காட்சியருளும் செங்கோட்டு வேலவர் திருவுருவம், சுமார் மூன்றரை அடி உயரம் கவரும்.

கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவத்தலங்களுள் இவ்வூரும் ஒன்று. தேவாரப் பாடல்பெற்றது. அருணகிரிநாதரால் 27 திருப்புகழுக்கு உரிய ஊர். தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் இவ்வூரை ‘கொடிமாடச் செங்குன்றுர்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

செங்குனறுர்க் கிழார், உரிச்சொல் ஆசிரியர் காங்கேயர், கபிலதேவர், திருச்செங்கோட்டுப் புராண ஆசிரியர், கவிராய பண்டிதர் முத்துசாமிக் கோனார் முதலியோர் வாழ்ந்து சிறப்புப் பெற்றது திருச்செங்கோட்டுப்பதி.

கொல்லி மலை:

நாமக்கல்லிலிருந்து 48 கி.மீ. தொலைவிலுள்ளது. இதன் உயரம் 1190 மீட்டர்களாகும். இம்மலையேற 70 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இம்மலையை சித்தர்கள் வாழும் ‘சதுரகிரி’ என சித்தர் இலக்கியங்கள் அழைக்கின்றன. இம்மலை மீது அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இதையொட்டி ‘அறப்பளீஸ்வரர் சதகம்’ பாடப்பட்டுள்ளது. இங்குள்ள ஆகாசகங்கை அருவி 200 அடிமேலிருந்து விழுகிறது. மலைவாழ் மக்களான “பச்சைமலையாளி”கள் இங்கு வாழ்கின்றனர். அடர்ந்த காடுகள் உண்டு. சமவெளிகளில் பயிரிடுகின்றனர்.

தேனுக்கும், பலாவுக்கும் கொல்லிமலை புகழ் பெற்றது. அரசு ஆதரவில் இங்கு ஒரு மூலிகைத் தோட்டமும் நர்சரியும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழக சுற்றுளலாத் துறையால் இங்கு ‘வல்வில் ஓரி’ விழா கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கொல்லிமலை, கடல் மட்டத்திற்கு மேல் 4,500 அடிகள் உயரம் உடையது. 87 சதுர மைல் பரப்புடையது. சுமார் 260 கிராமங்களைக் கொண்டது. இக்கிராமங்கள் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மலைப் பகுதியில் வனவிலங்குகளை கரடிகளும், புலிகளும் வாழும் புதர்கள் உள்ளன. இங்குள்ள பள்ளத்தாக்குகள் நான்கு. அவை விவசாயத்திற்கு பயன்படத்தக்கவை. இக்கொல்லி மலை தென்வடலாக 28 கி.மீ. நீளமும் கீழ் மேலாக 19 கி.மீ. அகலமும் உள்ளது. இம்மலையிலுள்ள பச்சைமலையாளிகளில் 360 பிரிவுண்டு.

சக்கரவர்த்தி, கூத்தாடி, சோப்பையன், சோத்தவடமன், கெளரசை, சிறுப்பை, வாரப்பன் ஆகியவைகளும் இவர்களின் தலைவர்களுக்கு பட்டக்காரர் என்றும், அடுத்தவருக்குக் கரைக்காரர் என்றும் பெயர். இவர்கள் திருமணத்தில் தாலியை மணப்பெண் கழுத்தில் கரைக்காரன் கட்டுகிறான். இவர்கள் தமிழை இழுத்து பேசுகின்றனர். இம்மலையில் ‘கொல்லிப்பாவை’ வாழ்வதாக புறநானுறு, குறுந்தொகை, சிந்தாமணி, நற்றிணை, சிலப்பதிகாரம் முதலிய நூற்களில் குறிப்பு உண்டு. நாமக்கல்லிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள சேந்தமங்கலம் சென்று, அங்கிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் சோலைக்கொல்லை வழியாகக் கொல்லிமலையிலுள்ள அறப்பளீசுவரர் கோயிலுக்கு செல்லலாம்.

கஞ்சமலை:

கஞ்சமலை, சேலம் – ஈரோடு இருப்புப் பாதையில் வேம்படி தாளம் என்னும் இரயில் நிலையத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இது கீழ்மேலாக 9 கி.மீ. நீளமுள்ள மலைத்தொடராக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் மேற்புரம் மலையடியில் சித்தேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதமாத சிவராத்திரியும், சித்திராப் பெளர்ணமியும் திருவிழா நாட்களாகும்.

நைனாமலை:

நாமக்கல்லுக்கு வடகிழக்கில் பத்துமைல் தொலைவில் நைனாமலை அமைந்துள்ளது. இங்கு வரதராசபெருமாள் கோயில் உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகு மிகுந்தவை. நயன மலையே நைனாமலை என்று ஆயிற்று.

கபில மலை:

நாமக்கல்லுக்கு மேற்கில் ஆறு மைல் தொலைவில் கபிலமலை என்னும் மலைத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மலை காவி நிறமுடையதானதால் கபிலமலை என்னும் பெயர் பெற்றது என்பர். சங்க காலப் புலவர் கபிலர் வாழ்ந்ததாகவும் கூறுவர். இம்மலைமீது முருகன் கோயில் அமைந்துள்ளது. இம்மலைக்குச் செல்லும் வழியில், நடுமலையில் ஒரு கற்குகை உண்டு. மலைக்கோயிலில் ஆண்டுதோறும் தைமாதத்தில் சிறப்பாக விழா நடைபெறுகிறது.

நாமக்கல் கோட்டை தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் குறுநில மன்னரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது, இதை கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது. திப்பு சுல்தான் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார். கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை புகழ் பெற்றன.

மிகப்பெரிய ஒற்றை பாறையின் (மலை) உச்சியில் கோட்டை உள்ளது. மலையை செதுக்கி குடைவரை கோவில்கள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள நரசிம்மர் கோவிலும் அரங்கநாதர் கோவிலும் மலையை குடைந்து செய்யப்பட்டவையாகும், மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டதாகும்.

நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லை. இந்த கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. மலையின் வடகிழக்கில் கமலாயக்குளம் உள்ளது. அதற்கு எதிரே நாமக்கல் நகரின் பேருந்து நிலையம் உள்ளது.

நாமக்கல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது “குப்பை இல்லா நகரம்” என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.

கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம் , நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும் , வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றண்ட்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.

விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படத்தி அதன்படி தென்தமிழகம் ,கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர் .பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெரும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும் , திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.

நாமக்கல் கோட்டை:

நாமக்கல் நகருக்கு பெருமையும் , புகழையும் சேர்ப்பது நாமக்கல் கோட்டை. இக்கோட்டையை இராமச்சந்திர நாயக்கர் 16 ஆம் நூற்றாண்டில் அமைத்தார் என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இக்கோட்டையில் இருந்து ஆங்கிலேயர்களை திப்பு சுல்தான் எதிர்த்து போரிட்டார். 16-வது நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட நாமக்கல் துர்கம் கோட்டையானது, நாமகிரி மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இந்த கோட்டையின் பரப்பளவு 1.5 ஏக்கராகும்.

கோட்டையின் தென் மேற்கு பகுதியில் உள்ள குறுகலான படிக்கட்டுகளின் வழியே இந்த கோட்டையை நாம் அடைய முடியும். நாமகிரி மலையின் இரு புறத்திலும் நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் ஆகியவை உள்ளன. இந்த கோவில்களில் இருக்கும் சிலைகள் மற்றும் இதர உருவங்கள் இங்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் புதிய பாறைகளிலிருந்து வடிக்கப்பட்டிருப்பதால் அவை இன்றளவும் நிலைத்திருக்கின்றன.

இந்த பாறைகளிலிருந்து உற்பத்தியாகும் எட்டு நீர்ச்சுனைகளையொட்டி தாமரை மலர்களும் வளர்ந்து வருகின்றன. திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த கோட்டையில சில காலம் மறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு இந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: