கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும், கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இத்தகைய கல்வெட்டுக்களே ஆதாரமாக விளங்குகின்றன. எனவே தற்போது கண்டறியப்பட்டுள்ள நடுகல்லுடன் கூடிய கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இரண்டாக உடைந்துக் காணப்படும் இந்த நடுகல்லில், புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டு கி.பி. 1,053-ம் ஆண்டை சேர்ந்ததாகும். இப்பகுதி அக்காலத்தில் விரியூர் நாடு என்று அழைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியின் தலைவனாக நித்த விநோதக கங்கன் என்பவன் இருந்துள்ளான். இவனுக்குக் கீழ் இருந்த கடிகாசிங்கன் என்பவனின் தம்பி பல புலிகளைக் கொன்று இறுதியில் ஒரு புலி தாக்கி இறந்துள்ளான். மேலும் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடொன்று மோதி இறுதியில் அவற்றில் ஒன்று இறந்துள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உயிரிழந்த வீரன் மற்றும் காளைக்கும் சேர்த்து இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் இறந்த வீரன் புலியைக் குத்தும் காட்சியும், வலப்பக்கம் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக தலைகளை முட்டிக்கொள்ளும் காட்சியும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு எடுப்பதைப் போன்றே சண்டையிட்டு இறந்த காளைக்கும் சிறப்பு செய்யும் வகையில் இங்கு நடுகல் எடுத்திருப்பது சிறப்பாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: