ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!

ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!

ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!

ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தைப் பார்க்கும் போது மலை நாட்டில் வாழ்ந்த இனக்குழுத் தலைவனாக இருக்க வேண்டும். இடது கையில் வில்லும், வலது கையில் நீண்ட வாளும் உள்ளது.

இடைக் கச்சில் குறுவாள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு நீண்ட வாள் இருப்பது இவ்வீரன் இனக் குழுத் தலைவன் என்பதைத் தெரியப்படுத்துகிறது. மேலும், இவ்வீரனின் வீரத்தையும், நாட்டுக்காக உயிர்விட்ட தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. பகைவர்கள் விட்ட அம்புகளில் ஒன்று வீரனின் கழுத்துப் பகுதியிலும் மற்றொரு அம்பு மார்பின் கீழ்ப் பகுதியிலும் பாய்ந்துள்ளதை இந்த நடுகல் விளக்குகிறது.

வீரத்தோடு இவ்வீரன் போரிட்டு மாண்டதை விளக்குகிறது. இவ்வீரன் எதற்காக இறந்தான் என்பதை, வீரனின் காலுக்கு அடியில் உள்ள ஆறு மாடுகளின் சிற்பம் விளக்குகிறது. இவ்வீரனின் ஊர் மாடுகளை (ஆநிரைகள்) எதிரி நாட்டார் கவர்ந்து செல்ல, அவற்றை மீட்கும் பொருட்டு நடைபெற்ற போரில் இரண்டு அம்புகள் பாய்ந்து இவ்வீரன் உயிர் விட்டிருப்பது தெரிகிறது.

எழுத்துக்கள் அழகாக கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு வாசகம் வருமாறு:

நெல்வா
இல்உடைய
உலாடக்கி.ஏறை
ஊ(ர்) அழியபட்டா(க்) சித்திர வில்
கன்நாடு மாரதவ(ய)
மான்கிவு கழ்பெருமா – என்று கல்வெட்டு முடிகிறது.

1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்ச் சமூகத்தோடு மாடுகள் இரண்டறக் கலந்திருந்த சிறப்புகளைக் கொண்ட மாடுகளின் சித்திரங்கள் மாட்டுப் பொங்கலோடு கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: