திருப்பூர் அருகே, 800 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 800 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 800 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ளது, சர்க்கார் கண்ணாடிபுத்துார். இங்குள்ள, பாறை ஒன்றின் மீது, 800 ஆண்டுகள் பழமையான, நான்கு கரங்களுடன், துர்க்கை அம்மன் சிலை கிடைத்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: பண்டைய காலம் முதலே, தமிழர் வழிபாட்டு முறையில், தாய் தெய்வ வழிபாடு இருந்துள்ளது. தலையோள், முதியோள் என, பெண் தெய்வ வழிபாட்டை, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிடுகின்றன. கொங்கு மண்டலத்திலும், பழங்காலம் முதலே, பெண் தெய்வ வழிபாடு இருந்ததற்கு, பல சான்றுகள் கிடைத்துள்ளன. உடுமலை அருகேயுள்ள, கண்ணாடி புத்துாரில், பாறை மீது, ஆறரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில், எருமை தலை மீது கம்பீரமாக உள்ள, துர்க்கை அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் மகுடம், காதில் காதணி, கழுத்து, கைகளில் அணிகலன்களுடன் நேர்த்தியாக உள்ளது. துர்க்கையின் பின் இடது கையில், சங்கு சக்கரம்; வலது கையில், சக்கரம் காணப்படுகிறது. இச்சிலை, 800 ஆண்டுகள் பழமையானது என்று, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: