கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி என்ற கிராமத்தில், 7 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஊரில் உள்ள வானகாத்தவநாதர் என்ற பழைமையான சிவன் கோயிலில் நான்கு கல்வெட்டுகளும், மாரியம்மன் கோயிலுக்கு அருகே மூன்று கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. இதில், மூன்று கல்வெட்டுகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. நான்கு கல்வெட்டுகள் 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

“வானகாத்தவநாதர் சிவன் கோயில் கருவறைச் சுவரில், சோழர் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு அழிந்துபோன கற்களைப் பயன்படுத்தி இந்தக் கோயில் மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் விஷ்ணுவுக்கு அருகே, கி.பி 921-ம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனின் 14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுகிறது.

இரண்டாவது கல்வெட்டு, கருவறையின் தெற்குச் சுவரில் தட்சணாமூர்த்தி சிலைக்கு அருகே காணப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி மட்டுமே படிக்கக் கிடைக்கிறது. மற்ற வரிகள் பிற்காலத்தில் தட்சிணாமூர்த்தியைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரில் மறைந்துவிட்டன.

மூன்றாம் கல்வெட்டு, கிரந்த மொழியில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்குகிறது. நான்காம் கல்வெட்டு, கோயிலுக்கு முன்பு வலதுபுறம் கோபுரத்தின் அருகே நடப்பட்டுள்ளது. ரெட்டாக்குறிச்சி மாரியம்மன் கோயிலின் எதிரில் 3 கல்வெட்டுகள் நடப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு, 13 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கல்வெட்டு, 150 செ.மீ உயரமும் 28 செ.மீ அகலமும் 23 செ.மீ தடிமனும் உடையது. இந்தக் கிராமத்தில் வரும் நில வருவாய், வரி வருவாய் போன்றவற்றில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வழிபாடும் திருப்பணியும், அன்றாட பூசையும் செய்ய வேண்டும் என்று மூன்றாவது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம்” என்று தெரிவித்தார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: