ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு!

ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு!

ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் வீரராகவன் (விழுப்புரம்), பொன்.வெங்கடேசன் (ஆறகளூர்) ஆகியோர் கொண்ட குழு, ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியில் உள்ள மாரமங்கலம், வடக்கு மலையான், கேளையூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வடக்கு மலையான் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும், கேளையூர் விநாயகர் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும், மாரமங்கலம் கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்தி பட்டான் நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:

மாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்னுமிடத்தில், கந்தன் என்பவரின் தோட்டத்தில் 200 ஆண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வீரன் தனது நீண்ட ஈட்டியால், ஒரு காட்டுப் பன்றியை குத்தி கொல்வதை போல் சிற்பம் உள்ளது. வீரனின் கொண்டை வலது புறம் சாய்ந்துள்ளது. காதுகளில் படாகம் என்னும் காதணியும், மீசை மேல் நோக்கி முறுக்கியபடி உள்ளது. இடையில் அழகிய முடிச்சுடன் கூடிய இடையாடையும், குறுவாளும் உள்ளது. வீரனின் கையில் உள்ள ஈட்டி பெரியதாகவும், கூர்மையாகவும் உள்ளது. இடது காலில் வீரக்கழல் உள்ளது. வலிமையோடு வீரன் குத்திய ஈட்டி, காட்டுப் பன்றியின் உச்சந்தலையில் குத்தி கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளது. வீரனின் வலது புறம் துப்பாக்கி ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. மேலும் நடுகல்லில், வீரன் கையாண்ட 2 வேட்டை நாய்களும் உள்ளன. இந்த 2 நாய்களும், வீரனுக்கு காட்டுப்பன்றியை வேட்டையாட உதவுவதை காட்டும்படி உள்ளது.

அக்கால கட்டத்தில் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்த சென்ற வீரன், அதனை குத்தி கொன்றுவிட்டு வீர மரணம் அடைந்ததின் நினைவாகவே இந்த நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில், 19 வரிகளுடன் செய்தி உள்ளது. மாரமங்கலம் அண்ணாமலை என்பவர், இந்த நடுகல்லை செய்துள்ளார். வாணிக்கொம்பை என்னுமிடத்தில் உள்ள விளை நிலங்களில் பயிர்களை, காட்டுப்பன்றிகளை அழித்து நாசம் செய்து வந்துள்ளன.

காத்தா கவுண்டனின் மகனான நக்ககவுண்டன் என்பவர், காட்டுப்பன்றிகளை கொன்று தானும் இறந்துள்ளார். அதன் நினைவாகவே வீரக்கல் வைக்கப்பட்டுள்ளது. மாரமங்கலம் மற்றம் வடக்கு மலையான் பகுதியில், சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், கரடு முரடான கற்கருவிகளை செதுக்கியதோடு அவற்றை கூர்மையானதாக செய்துள்ளனர். சிறிய உருண்டை வடிவிலான கற்களை கொண்டு, விலங்குகளை தொலைவில் இருந்து தாக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். புதிய கற்கால மனிதன் வாழ்ந்த காலத்தில், உணவுப்பயிர் பயிரிடும் முறையையும், ஆடு, மாடுகளை வீட்டு விலங்குகளாகவும் பழக்கியுள்ளனர். அத்துடன் நிரந்தர இடத்தை அமைத்து கிராம வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த கிராமங்களில் உள்ள புதிய கற்கால கருவிகள் பல நூற்றாண்டுக்கு முன்பு இங்குள்ள ஒடைகளிலும், விளை நிலங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை, கிராம மக்கள் தெய்வங்களாக பூஜித்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால், ஏராளமான அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>