400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மாணவர்கள், பர்கூர் அடுத்துள்ள ஜெகதேவி பாளையத்தில் தொல்லியல்துறை ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் .


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

தமிழர் பண்பாடுகளின் மேன்மைக்கு உதாரணமாக விளங்கும் வரலாற்றுச் சின்னங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகம் கண்டெக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் பெரும்பாலும் தொறுப்பூசல், போரில் உயிர் நீத்தவர்களுக்கு கல், புலிக்குத்திப்பட்டான் கல், பன்றிக்குத்திப்பட்டான் கல், யானைக்குத்திப்பட்டான் கல், சதிக்கல் நவகண்டக்கல் மற்றும் இசைக் கலைஞர்களுக்கான நினைவுக்கல் அதிக அளவில் காணமுடிகிறது.

இந்த முறை ஒரு படைவாத்திய கலைஞனின் நடுகல் கிடைத்துள்ளது. இந்த நடுகல் 16, 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். மேலும் நடுகல்லில் உள்ள சிற்பங்கள் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் படைவாத்திய கலைஞன் நெற்றிச்சேவன், முன்னோடி சேவகன் என்று எடுத்துக்கொள்ளலாம்.

படைவாத்தியன் வலது கையில் வாளை உயர்த்தி பிடித்துள்ளான் . மேலும் இடது கையில் எக்காளம் அல்லது ஊதுகொம்பு தொங்கவிட்டுள்ளான். மேலும் தலைப்பாகை, அணிகலன்கள் அணிந்துள்ளான். அவனுக்கு அருகில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் அவனுக்கு மனைவியாக இருக்கலாம்.

மேலும் அவளது வலது கையில் மதுக்குப்பி உள்ளது. அதனால் அவள் உடன்கட்டை ஏறி உயிர்நீத்துள்ளார் என்று தெரிய வருகிறது. இவ்வாறு பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: