கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்து பாதுகாக்கப்படும்ட 400 ஆண்டு பழமையான நடுகல் குறித்து வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று தடயங்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகம் நடுகற்கள் கொண்ட மாவட்டமாக கருதப்படுவதால், கண்டறியப்பட்ட நடுகற்கள் மூலம் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு முறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அவதானப்பட்டி அருகே நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அய்யம்பெருமாள் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டுக்கு சென்ற குழுவினர், வடக்கு புறத்தில் பூமி மட்டத்திற்கு கீழே 4.5 அடி உயரம் கொண்ட நடுகல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மூன்று புறம் சுவர் போல் கற்களை அமைத்து, அதன் மேற்புறத்தில் 5 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட பெரிய பலகையால் மூடப்பட்டிருந்தது. அங்குள்ள நடுகற்கள் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த நடுகல்லானது, இறந்துவிட்ட வீரனுடன், அவனது மனைவியர் நால்வரும் உடன்கட்டை ஏறும் நிகழ்வை காட்டுவதாக உள்ளது. இந்த வீரன் படைத்தளபதியாகவோ, வீரர் கூட்டத்தின் தலைவனாகவோ இருக்கலாம். வீரனுக்கு இருபுறமும் இரண்டு மனைவியர் காட்டப்பட்டுள்ளனர்.

இருவரது கைகளில் மதுக்குடம் உள்ளது. நடுகல்லின் மேல் நாமம் மற்றும் சங்கு சக்கரம் இடம் பெற்றுள்ளன. இறந்த வீரன் ஒரு வைணவ பக்தன் என்பதை இது குறிக்கிறது. கல்லின் மேல் சுற்றில் சிறு, சிறு குழிகள் உள்ளன. இவை விளக்கு எரிக்க பயன்படுத்தியிருக்கலாம், என்றார். நடுகல்லை பாதுகாக்கும் ராஜேந்திரன் கூறுகையில், பரம்பரை, பரம்பரையாக இந்த நடுகல்லை வழிபட்டு வருகிறோம். கடந்த 2007ம் ஆண்டு முதல் இதை வழிபட்டு வருகிறோம். இந்த நடுகல்லின் அடிப்பகுதியில் இப்போதும் தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது, என்றார். இந்த ஆய்வின் போது குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், நாராயணமூர்த்தி, மதிவாணன், விஜயகுமார், பிரகாஷ் விமலநாதன், லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: