ஜவ்வாதுமலைப் பகுதியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

ஜவ்வாதுமலைப் பகுதியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

ஜவ்வாதுமலைப் பகுதியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட 32 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், புங்கம்பட்டு நாட்டிற்கு உள்பட்ட”கல்லாவூர்’ என்ற கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, சென்னை மாநில கல்லூரி தமிழ் பேராசிரியர் லட்சுமி, ஜவ்வாதுமலை ஆய்வாளர்கள் ராமன், கோவிந்தராஜ், முனிசாமி குழுவினர், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது, புங்கப்பட்டு நாட்டிற்கு உட்பட்ட கல்லாவூர் என்ற கிராமத்தில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: ஜவ்வாது மலையில் உள்ள கல்லாவூர் மலை கிராமத்தில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல் வட்டம், கற்திட்டை அதனுள் முதுமக்கள் தாழி என உள்ள புதைவிடம் எனப்படும் சுடுகாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர், இறந்த முன்னோர்களை தாழி எனப்படும், பானையில் வைத்து புதைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இதற்கு முது மக்கள் தாழி என்று பெயர். சங்க காலத்திற்கு முன்பிருந்தே, இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது, கல்லாவூரில் பெரிய பலா மரங்களுக்கு அருகில் உள்ள, சின்ன அனுமன் என்பவர் நிலத்தில் அடர்ந்த மூங்கில் மரங்களுக்கு இடையே, நான்கு கற் திட்டைகள் உள்ளன.

60 அடிகளில் கல் வட்டங்களும், அதற்குள் கற் திட்டைகளும், அதற்கு உள்ளே முதுமக்கள் தாழிகள் உள்ளன. தாழிகளில் உள்ள பானைகளில், சாம்பல் போன்ற பொருட்களும், எலும்பு துண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதன் உள்ளே, தெய்வத்தின் ஆபரண பொருட்கள் இருப்பதாகவும், இதை பெரிய பாம்பு ஒன்று காவல் காப்பதாகவும், இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

எனவே, பானைகளில் உள்ள பொருட்களை அகழாய்வுக்கு உட்படுத்தி, கார்பன் 14 என்ற சோதனை செய்தால் இதன் பழமையை அறிவியல் பூர்வமாக அறியலாம். இது போன்ற கற் திட்டைகள், கல் வட்டம், முதுமக்கள் தாழி ஆகியவை ஜவ்வாது மலையில், கிழ்ச்சேப்பிளி, கோம்பை, கல்லாவூர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: