கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு!

கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு!

கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு!

நெகமம் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே, தேவணம் பாளையம் அடுத்த, பட்டணத்தில், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக குழி தோண்டியபோது, மண்ணில் புதைந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அதில், ஆண் ஒருவர், தன் வலப்புறத்தில் இரண்டு பெண்கள், இடது புறத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கை கூப்பியுள்ள ஆணின் பின், வேல் போன்ற ஆயுதம் உள்ளது. இடது புறம் உள்ள பெண், தன் இரு கைகளை உயர்த்தி, பொருள் ஒன்றை ஏந்தியவாறும்; வலப்புறம் உள்ள பெண், ஒரு கை மடக்கியவாறும், ஒரு கையில் குடுவையை ஏந்தியவாறும் காணப்படுகிறது. சிற்பத்தில் உள்ள ஆண், முழங்கால் வரையும்; பெண்கள், கணுக்கால் வரையும் ஆடை அணிந்து, அணிகலன்கள் சூடி காணப்படுகின்றனர். இதேபோல், மற்றொரு நடுகல் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

பட்டணம் கிராமத்தில், ஐந்து ஆண்டுக்கு முன், சாலையோரத்தில், 3 அடி உயரத்தில் பெண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு பெண், தன் வலது கையில் குழந்தையை அணைத்தவாறும், இருபுறத்திலும், இரண்டு மாடுகள் பெண்ணை முட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தாய் தெய்வ வழிபாட்டுக்கு அடையாளமாக உள்ள இந்த சிற்பத்தின், கீழ் பகுதியை தோண்டி எடுத்து பார்த்த போது, மூன்று வரி கல்வெட்டு எழுத்துக்கள் காணப்பட்டன. அதன் அடிப்படையில், 200 ஆண்டு பழமையான சிற்பம் என தெரியவந்தது.

இரு நடுகல்அதே பகுதியில், தற்போது, இரு நடுகல் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத்துகள், படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற சிற்பங்களை காக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>