திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் – உடுமலை அருகே, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த இயக்குனர் ரவிக்குமார், பொன்னுசாமி, யுகன் ஆதித் ஆகியோர் நடத்திய கள ஆய்வில், இந்த நடுகற்கள் பற்றி தெரியவந்தது.

நாயக்கர் காலத்தை சேர்ந்த மூன்று நடுகற்கள், ஒரே இடத்தில், குளத்தின் கரையில் அமைந்துள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், தமிழர் வாழ்வியல் இனக்குழு முறையாகவும், பெருஞ்செல்வமாக கால்நடைகளும் இருந்தன.விலங்குகள், திருடர்களிடமிருந்து, தங்கள் இனக்குழுவை, செல்வத்தை காக்கும் வீரர்களுக்கு, நடுகல் அமைத்து வழிபட்டனர்.அந்த வகையில், இங்கு மூன்று நடுகற்கள், ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் உள்ளன.முதல் நடுகல் வீரன், புல்லாங்குழல் இசைக்கும் வகையிலும், அதை மாடு ரசித்தபடியும், இரண்டாவது நடுகல் வீரன், வலது கையில் ஈட்டியும், இடது கையில், மாட்டின் கொம்பு களையும் பிடித்தபடி அமைந்துள்ளன. மூன்றாவது நடுகல்லில், வீரன் இறந்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்வது போலவும், இடது புறம் உடன் உறவாக மாடு இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.மூன்று சிற்பங்களிலுள்ள வீரர்களும், காது, கழுத்துகளில் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய, அணிகலன்கள் அணிந்துள்ளனர். கை, கால்களில் வீரக்காப்பு உள்ளது. சிகை இடது புறம் சாய்ந்தும் காணப்படுகிறது. ஒரே இடத்தில் மூன்று நடுகற்கள் இருப்பதும், தமிழக சிற்பக்கலைக்கு கட்டியம் கூறுகிறது.காற்றில் பறக்கும் ஆடை, அணிகலன்கள் என, வீரர்களின் ஒவ்வொரு அங்கங்களும் தெளிவாக, ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உள்ளபடியும் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த இயக்குனர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: