16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் ஏற்காடு மலைக் கிராமத்தில் கண்டுபிடிப்பு!

 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் ஏற்காடு மலைக் கிராமத்தில் கண்டுபிடிப்பு!


16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் ஏற்காடு மலைக் கிராமத்தில் கண்டுபிடிப்பு!

ஏற்காடு ஒன்றியம் வாழவந்தி கிராமத்தில் நாகம்மன் காடு என்ற பகுதியில் ஏற்காடு வரலாற்று ஆய்வுக்குழுவை சேர்ந்த தொல்லியல் குழுவினர், ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் நிலத்தில் கேட்பாரின்றி கிடந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு கல்லில் வீரனின் சிற்பமும், காட்டெருதின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் தலையில் போர்கவசம், மார்பில் பெரிய பட்டையுடைய ஆபரணமும், கைகளில் மணிக்கட்டில் ஒரு வளையமும், மேல் கையில் இரண்டு வளையங்கள், இடுப்பில் வாளுடன் கூடிய கச்சையும் போர் உடை உடுத்தியது போன்று வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மேலும், வீரனின் இடதுகை எருதின் அருகிலும், விலங்கின் மீதுள்ள அச்சத்தால் வலதுகை கட்டாரி ஏந்தியவாறும் உள்ளது. எனவே, இதில் உள்ள விலங்கு காட்டெருது என்பது உறுதியாகிறது. இந்த நடுகல் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலத்திலேயே எல்லைப்புற பழங்குடிகள் காட்டு விலங்குகளை பழக்கி விற்பனை செய்வதை தொழிலாக கொண்டிருந்துள்ளனர். வனத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் காட்டெருதுகளை காக்கும் பொருட்டு ஏற்பட்ட போரில் விழுப்புண்பட்டு மரணமடைந்த வீரனின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது. இந்த நடுகல் கற்கூடாரத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளது. அதன் வாயில் பகுதியில் இரண்டு புறத்திலும் நாகங்களின் சிலைகள் நடப்பட்டுள்ளது.

காட்டெருது காத்த பட்டான் நடுகல்லிற்கு சற்று இடைவெளி விட்டு புலிக்குத்தி பட்டான் நடுகல் அமைந்துள்ளது. இந்த நடுகல்லில் வீரன் புலியின் மார்பில் ஈட்டியை பாய்ச்சியப்படி செதுக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு அதனை கொன்று விழுப்புண்பட்டு இறந்திருப்பார். அவரது நினைவாக இந்த நடுகல் நடத்தப்பட்டுள்ளது. இதில், வீரனின் தலையில் கவசமும் பெரிய காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. பாதியளவு மண்மூடிய நிலையிலும் வேர்களின் இடையில் சிக்கியவாறும் இந்த நடுகல் காணப்படுகிறது. இதுபோன்ற இரண்டு நடுகற்கள் அருகருகே காணப்படுவதும், காட்டெருமை காத்த பட்டான் கல் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறையாகும். இது ஏற்காடு வரலாற்றுக்கு பெருமை சேர்ப்பதாகும். மிகவும் அரிதானதாக இருக்கும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: