பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஆன திகம்பரேஷ்வரர் கோயில் பின்புறம் உள்ள புதரில் வீரர்களின் படம் செதுக்கிய மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டேடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆன திகம்பரேஷ்வரர் கோயில். இங்குள்ள பெத்த நாச்சியார் அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள புதரில் மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இப்படிப்பட்ட நடுகற்கள் கிடைப்பது அபூர்வம். பொதுவாக நடுகற்களில் ஒரு வீரர் அல்லது இரண்டு வீரர்கள் உருவம் மட்டுமே இருக்கும். இந்த நடுகல்லில் சற்றே வித்தியாசமாக இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள், ஒரு சிறுவன் என உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இது 16-ம் நூற்றாண்டு விஜயநகர அரசு காலத்திய நடுகல்லாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பல சரித்திர தகவல்கள் வெளிவரக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போரில் வீர மரணம் அடைந்தவரின் நினைவாக, அவரது வீரத்தை பேற்றும் வகையில் நடுகல் எடுக்கப்பட்டு, அக்கல்லில் வீரனின் வீரக்கதையை சிற்பமாகச் செதுக்கி வழிபடுவது பண்டைய மரபாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>