திருப்பத்தூர் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆறு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆறு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆறு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, 16ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆறு நடுகற்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் பிரபு, திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள, வேடியப்பன் நகரில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். அதில், ஒரே இடத்தில் ஆறு நடுகற்கள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது:

வேடியப்பன் நகரில், பழமையான அழிஞ்சி மரங்களுக்கு நடுவில், ஆறு நடுகற்கள் உள்ளன. ஒவ்வொரு கல்லிலும், வீரர்கள் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் கையில் வில், அம்பு ஏந்தியும், வில்லில் இருந்து அம்பு செலுத்தும் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வீரனின் முதுகில், அம்புக்கூடு இடம் பெற்றுள்ளது. வீரர்கள் கொண்டையிட்டுள்ளனர். கழுத்தில் அணிகலன்கள், பூணூல் அணிந்துள்ளனர்.

இரண்டு வீரர்கள் மட்டும், முறுக்கு மீசையுடன் உள்ளனர். வீரர்களின் இடையில் சிறிய கத்தியும், இடைக்கச்சும் காணப்படுகிறது. நடுகற்கள் அனைத்தும், ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில், இப்பகுதி மக்கள் நடுகற்களுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வழிபடுகின்றனர்.

16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தை சேர்ந்த நடுகற்களாக உள்ளன. வரலாற்று கண்டுபிடிப்புகளை, தமிழக அரசு ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>