திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை, அவரை வணங்கும் மன்னரின் சிலை, சேதமடைந்த மண்டபம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வத்திராயிருப்பு அருகே, சுரக்காய்பட்டி கிராமத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் நடுகல், அந்த வீரரை வணங்கும் மன்னரின் சிலை மற்றும் மண்டபத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழையும் புலிகள் ஆடு, மாடுகளை கொன்றன. இந்த புலிகளை வேட்டைக்குச் சென்று குத்திக் கொல்லும் வீரனுக்கு, நடுகல் அமைத்து புலிக்குத்தி சாமி என அக்காலத்தில் அழைத்து வழிபட்டுள்ளனர்.

வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லும் வீரர், புலியை குத்துக்கம்பால் குத்தும்போது வலி தாங்காமல் புலி வாயை திறப்பது நடுகல்லில் தெரிகிறது. வீரருடன் சென்ற நாய் புலியை கடிக்கிறது. வீரர்கள் அணியும் மரவுரி உடையும், ஆடையில் குறுவாளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்கம் அள்ளி முடிந்த கொண்டையுடன் மூன்று பெண்கள், வீரரின் அருகில் நிற்பதன் மூலம், அவ்வீரனுக்கு மூன்று மனைவிகள் இருப்பது தெரிய வருகிறது.

புலிக்குத்தி வீரரின் தென்புறத்தில் மன்னர் ஒருவர் நின்று வணங்குவதாக ஒரு கற்சிலை உள்ளது. மன்னரின் கழுத்தில் மணிமாலைகள், அவரது இடுப்பின் இடப்பகுதியில் குறுவாள் உள்ளன. இடப்பக்கம் கொண்டையை அள்ளி முடிந்துள்ளார். ஒரே கல்லில், முன் பகுதியில் மன்னர் உருவமும் இடது, வலது புறங்களில் மன்னரின் மனைவிகளும் உள்ளனர். இதன் மூலம் அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தது தெரிய வருகிறது. மன்னர் மற்றும் அவரது மனைவிகள் சிலைகள் புலிக்குத்தி வீரனை வணங்கும் விதமாக உள்ளது.

புலிக்குத்தி வீரர் மற்றும் மன்னர் சிலைகளின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் நுழையும் விதமாக கதவுடன் கூடிய புலிக்குத்தி மண்டபம் ஒன்று சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு இளைப்பாறும் அறையும், அதன் மேற்பகுதியில் பாம்பு தவளையை விழுங்குவது போலவும், இரு மீன்கள் மலரை நோக்கி வருவது போலவும், அறை தூண்களில் ஆமை, அதற்கு கீழே மேகங்களுக்கிடையே சிவலிங்கம் உள்ளது. இதற்கு கீழ் ஒருவர் வணங்கியபடி உள்ளார்.

ராமர் வில்லுடனும், அவருக்கு கீழே அனுமன் மண்டியிட்டும் உள்ளார். அறையின் நிலைக்கு மேல் கஜலட்சுமி சிலை உள்ளிட்ட பல சிலைகள், மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, நடுகற்களும், மண்டபமும் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக தெரிகிறது என ஆய்வாளர் குழுவினர் தெரிவித்தனர். தொன்மை வாய்ந்த நடுகற்களையும், மண்டபத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>