சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையில் பிற்கால பாண்டிய மன்னர் காலத்து 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் இருப்பதை விரிவுரையாளர் தங்கமுனியாண்டி கண்டறிந்தார்.

சிவகங்கை தாசில்தார் கந்தசாமி அந்த கல்வெட்டுக்களை மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன், கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அந்த இரண்டு கல்வெட்டுகளும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பிற்கால பாண்டிய மன்னர், நல்லுார் என்ற ஊரில் இருந்த இறைவனுக்கு ஒரு மா நிலம் தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்கு கடமை, அந்தராயம், வினியோகம், பேர்கடமை போன்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் நிலத்தை சந்திரன், சூரியன் உள்ளவரை (காலம் முழுவதும்) அனுபவித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலமானது குடிதாங்கி என்ற அளவுகோலால் அளக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஒரு கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு கல்வெட்டில், பிற்காலப் பாண்டிய மன்னர் புல்லுார் என்ற ஊரில் இருந்த இறைவனுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளார். அந்த நிலத்தை பூதலன் நாராயணன் ஸ்ரீரங்க வள்ளல் என்ற குறுநிலத் தலைவன் அல்லது அந்த பகுதி அரசு அதிகாரி சுந்தரபாண்டியன், என்ற பெயருடைய அளவுகோலால் அளந்துள்ளனர், என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லுார், புல்லுார் ஆகிய இரு ஊர்களும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவை தான். தற்போது அவற்றின் பெயர்கள் மறுவியிருக்கலாம். இரு கல்வெட்டுகளும் அருங்காட்சியக கற்சிற்ப பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: