ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கில், ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் மற்றும் கேளையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, சுந்தரம், வரதராஜ் உள்ளிட்டோரின் உதவியோடு கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, திரெளபதி அம்மன் கோவில் அருகே கல்வெட்டு ஒன்றினை கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டை கொண்டு சந்தனக்கட்டையை தேய்த்து சந்தனம் எடுக்க மக்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “இந்த கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்ததும், பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கல்வெட்டில் செடையின் பன்மரான திரிபுவன சக்ரவர்த்தி சுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் தற்போதுள்ள கோவிலூர் கிராமத்தை பெருமாமலை எனவும் அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வானீஸ்வரர் என்ற சிவன் கோயிலில் சுவாமியை கூடலுடையார் என்று அழைத்துள்ளனர். கோயில் வழிபாட்டு செலவிற்காகவும், பெருமாமலை நாயனார் செலவிற்காகவும் பவள வாயர் என்பவர் தானமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலமானது கேலையூர் பகுதியில் உள்ள பாறைக்கரை என்னுமிடத்தின் வடக்கு பகுதியை இரண்டு சூலக்கல்லுக்கு தானமாக விடப்பட்டுள்ளது. இந்நிலத்தில் விளையும் பொருட்களை அமுது படைக்க ஒரு பருக்கை குறைவின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இவ்வாறு கூறினார். மேலும் இதே பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான 6 அடி உயரம் கொண்ட நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொன்மையான நாகரீகத்தை கொண்ட தொல்குடிகள் இங்கு வாழ்ந்ததை கண்டறிய முடிகிறது. மேலும் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: