நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சாயல்குடி பகுதி உலகு சிந்தாமணி வளநாட்டுப்பகுதியில் இருந்தாக குறிக்கப்பட்டு உள்ளது. இந்த வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. இதன்படி நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம்

இங்குள்ள கோவிலை மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன் கோவில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோவில் என்றும் அழைப்பர். நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில் 3 கோவில்கள் உள்ளன. இவை கடற்கரை மணல் பாறைகளால் கட்டப்பட்டுள்ளன.

தெற்குநரிப்பையூரில் சுமார் 500ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் உள்ளது.தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் ஒன்றும், வெட்டுக்காடு பகுதியில் ஒன்றும் என இரு பாண்டியர் கால சிவன் கோவில்கள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன.

நரிப்பையூர் குதிரை மொழி பகுதியில் எட்டுக்கைகளுடன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள உலகம்மன் (காளி) கோவில் உள்ளது. மேற்கூரை இல்லாத அந்த கோவில் வெளிப்புறச்சுவர்களில் கி.பி.13–ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருகல்வெட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கமுதி அருகில் உள்ள எருமைகுளம், கடலாடி அருகில் உள்ள ஆப்பனூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதேபோல் பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு பகுதியிலும் எட்டுக்கைகளை உடைய காளி கோவில் உள்ளது. மதுரை ஐராவதநல்லூரில் இதே சிலைபோன்று ஒருசிலை உள்ளது. இருசிலைகளும் மதுரையில் ஒரே இடத்தில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மதுரைக்கும், நரிப்பையூருக்கும் இடையே உள்ளதொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: