13ம் நூற்றாண்டு வணிக கல்வெட்டு, வணிகக்குழு தீர்ப்பு சொல்ல உதவிய கரண்டி கண்டுபிடிப்பு!

13ம் நூற்றாண்டு வணிக கல்வெட்டு, வணிகக்குழு தீர்ப்பு சொல்ல உதவிய கரண்டி கண்டுபிடிப்பு!

13ம் நூற்றாண்டு வணிக கல்வெட்டு, வணிகக்குழு தீர்ப்பு சொல்ல உதவிய கரண்டி கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, ஆறகளூரில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த வணிக கல்வெட்டு மற்றும் வணிகக் குழு கரண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வெங்கடேசன், ஆறகளூரில் ஆய்வு மேற்கொண்டார். கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே, ராமன் என்பவரின் விளைநிலத்தின் வரப்பின் மீது, ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவை, 13ம் நூற்றாண்டு கல்வெட்டு என தெரிய வந்தது.


ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த கல்வெட்டில் மொத்தம், 16 வரிகள் உள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும் புரவாரியாருக்கு’ என, கல்வெட்டு துவங்குகிறது. களப்பாளராயர் என்பவர் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன், நிலங்களை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரியாக இருந்தார். இவரது உத்தரவுப்படி, கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. புரவாரியார் என்பவர் வரிக் கணக்கை சரி பார்க்கும் அலுவலர் ஆவார். களப்பாளராயரின் ஆணையை புரவாரியார் நிறைவேற்றி உள்ளார். ஆறகளூரில் வாழ்ந்த வணிகர்கள், அரசுக்கு செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை எனவும், அந்தப் பணத்தை, ‘உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனார்’ கோவிலுக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜை, திருப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டின் கடைசியில், ‘தன்ம தாவளம்’ என்ற சொல், மிகப் பெரிய வணிக நகரை குறிக்கிறது. 12ம் நூற்றாண்டில் மகதைப் பெருவழி என்ற வணிக வழிப் பாதை ஒன்று இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் ஒரு மைல் கல் இருந்தது. அதில் ‘ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்’ என்று குறிப்பிடப்பட்டு, கீழ் பகுதியில் ஒரே அளவிலான, 16 குழிகள் உள்ளன. இவை, ஆறகளூர் – காஞ்சிபுரம் இடையேயான தூரத்தை குறிக்கிறது. இந்த மைல்கல், சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.

வணிகக்குழு கரண்டி:

காமநாதீஸ்வரர் கோவிலையொட்டி உள்ள தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும், இவர்களது மடத்தில், 15ம் நூற்றாண்டின் சங்கிலியால் இணைக்கப்பட்ட வணிகக் குழு கரண்டி கண்டறியப்பட்டது. இக்குடும்பத்தினர் வழக்குகளை விசாரிக்கும் போது, இந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்து, தீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்ததால், இன்றளவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த கரண்டியின் முனையில் வட்ட வடிவமான குழியும், பெரிய அளவில் சூரியன், சிவலிங்கம், சிறிய அளவில் விநாயகர் உருவம் உள்ளது. இரண்டு கரங்களிலும் அமிர்த கலசம் இருக்கிறது. கைப்பிடி பகுதியில் ஒன்பது பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் எடை கல், தச்சரின் கருவி, இரும்பு வேலைக்கான கருவிகள் உள்ளிட்ட வணிக குழு சின்னங்கள் உள்ளன. கடல் வணிகம், எண்ணெய் வணிகம், இசை கருவிகள், தராசு போன்றவை காட்டப்பட்டுள்ளன. முதல் பிரிவில் மூன்று ஆண்கள் நிற்பது போல் உள்ளதால், இவர்கள் வணிக குழு தலைவராக இருக்கக் கூடும். இந்த சான்றுகள் மூலம், ஆறகளூர் வணிக நகரமாக இருந்தது உறுதியாகிறது. 12ம் நூற்றாண்டில், பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: