அழியும் நிலையில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் வரலாற்று சின்னங்கள்!

அழியும் நிலையில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் வரலாற்று சின்னங்கள்!

அழியும் நிலையில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் வரலாற்று சின்னங்கள்!

‘பல்லவர் கால, 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களை காப்பாற்ற வேண்டும்’ என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் தாலுகா விராலுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாகமலை. இக்கிராமத்திற்கு, கிழக்கு கடற்கரை எல்லையம்மன் கோவிலில் இருந்து, சித்தாமூர், செய்யூர் வழியாக செல்லலாம். இங்கு, பஞ்ச பாண்டவர் மலை, குறத்தியர் மலை, கருப்பங்குன்று என பல பெயர்களில் மலைகள் உள்ளன. இந்த மலைகளில் சமண துறவியர்கள் தங்கி அறப்பணிகளை செய்ததற்கான, பல சான்றுகள் உள்ளன. ஏறத்தாழ, 1,300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கல்வெட்டு சான்றுகளுடன், பல்லவர் கால குடவரைக்கோவில் உள்ளது.

மூலிகை அரைக்கப் பயன்படும் மருந்துக் குழிகள், துறவியர் உறங்க கற்படுக்கைகள், மழை நீர் உட்புகாமல் தடுக்கும் அணைகள் இங்குள்ளன. இயற்கையாய் அமைந்த குகைப்பள்ளி, கட்டட எச்சங்கள், சமண தீர்த்தங்கரர் திருமேனிகள் என, பல சமணம் சார்ந்த தடயங்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்ட சமண மதத்தினர், மாதந்தோறும் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். பல்லவர் கால கலைச் சிற்பங்கள் நிறைந்து விளங்கும் மாமல்லபுரம் அருகில் இம்மலை உள்ளது. ஆராய்ச்சி நோக்கத்திற்காக வருவோர், உயர்கல்வி மாணவர்கள் மற்றும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இப்படி வரலாற்று தொல்லியல் பின்னணி நிறைந்த நாகமலை, சிறிது சிறிதாக அழியும் தருவாயில் உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த கல்வெட்டு, சமண தடயங்களையும், பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல் துறையினர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அழியும் ஆபத்தில் உள்ள, பல்லவர் கால வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என, தொல்லியல் துறை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: