அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சிறுஞ்சுனை கிராமத்தில், தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தனது குழுவினருடன் சிறுசுனை கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அப்போது 13ம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:
உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்த புரவரி உரிமை அரசிறை எனப்படும் காணிக்கடன் நீக்கப்பட்ட ஊர்களில் அவ்வூரின் நன்செய், புன்செய் முதலிய நிலங்களின் விளைச்சல் வருவாய்க்கு ஏற்றவாறு உள்ளூர் நிர்வாக தணிக்கையின் அடிப்படையில், வசூலிக்கப்படும் வரியே, புரவரியாக பெறப்பட்டு உள்ளது.
இதனை வசூலிக்கும் அதிகாரமும் தணிக்கை செய்யும் அதிகாரமும் பெற்ற அதிகாரி சீகரணத்தார் என அழைக்கப்பட்டு உள்ளனர். சோழர் ஆட்சியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரகடனப்படுத்தி, ஊர் குடிமக்களின் நிர்வாக தலைமை இடமாக விளங்கிய கோயிலில் இந்த ஆசிரியம் கல்வெட்டு நடப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டின் மூலம் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி, அந்தந்த கிராமங்களின் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.