ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்காடு வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பட்டிப்பாடியாகும். இவ்வூரின் அருகே அமைந்துள்ள அரசு பள்ளியின் அருகில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது. இவ்வாறு நடுகற்கள் நடப்பட்டதாலேயே இக்கிராமத்திற்கு நடூர் என பெயர் பெற்றது.

தங்களின் இனக்குழுவை காக்கும் பொருட்டு, புலியோடு போரிட்டு மாண்ட வீரனைப் போற்றும் வகையில் நடப்படும் கல் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லாகும். இந்த நடுகல்லில் வீரனின் வலது கையில் உள்ள ஈட்டி புலியின் வாயில் குத்தி தலையின் பின் பகுதியில் வெளிப்படுவதுப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் மற்றொரு நடுகல் புலியை வேட்டையாடும் போது இறந்த வீரனின் நினைவாக நடப்பட்டதாக தெரிகிறது. வீரனின் கையில் உள்ள ஈட்டி புலியின் முதுகில் குத்தியவாறு செதுக்கப்பட்டுள்ளது.

புலி வீரனுக்கு மறு திசையில் திரும்பியவாறு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைமுடி இடது புறம் அள்ளி முடிந்த கொண்டையும் இடையில் அணிந்த உடை வேலைபாடுடையதாக செதுக்கப்பட்டுள்ளது. இது மற்றப்பகுதிகளில் காணப்படும் நடுகற்கலைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். இதன் அருகில் சிறிய நடுகல் காணப்படுகிறது. இதில், வீரன் நின்ற நிலையில் வலக்கரத்தில் ஈட்டியை ஏந்தியப் படி செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலது புறத்தில் நாயின் உருவமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வீரனோடு மாண்ட நாயையும் சிறப்பிக்கும் வகையில் நடுகள் வைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் நடுகல் ஒரே குழுவைச் சேர்ந்த வெவ்வேறு காலத்தைச் சேர்ந்ததாகும். மேலும், இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: