கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரசன் ராஜேந்திரசோழனின் ஆட்சி கால சாசனக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஜான், இடுக்கி மாவட்டம் மேப்பாறையில் சோழர்கால சாசனத்தை சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்தார். பழங்கால தமிழ் பிராமி எழுத்துக்களால் பெரிய பாறையில் எழுதப்பட்டுள்ள, இந்த சாசனத்தில், சோழ வம்சத்தின் புகழ் பெற்ற அரசனான ராஜேந்திரசோழனின் 10 ஆம் ஆண்டு ஆட்சி காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மத்திய கேரளத்தில் இருந்து சோழர்கால சாசனம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். கேரள பல்கலைக் கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அஜித்குமார் தலைமையிலான குழு இந்த கல்வெட்டு குறித்து ஆய்வு செய்தனர். அதில், ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலிலும், திருமலையிலும் ஏற்கெனவே உள்ள சாசனங்களில் ராஜவம்சமான விக்ரம மன்னனிடமிருந்து மலைசார்ந்த இந்த பகுதியை வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தப் பகுதி என்பது குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லாமலிருந்தது. தற்போது கிடைத்துள்ள சாசனத்தின் மூலம் சோழர்கள் இடுக்கி மாவட்ட மலைப் பகுதியையும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், சோழர்கள் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த இங்கு படையெடுத்து வந்தார்கள் என்பது ஆராய்ச்சியாளர் அஜித்குமாரின் கருத்தாகும்.

மேலும் பாண்டிச்சேரி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ராஜன், மைசூர் ஆர்க்கியாலஜி சர்வே ஆப் இந்தியாவின் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அச்சாசனத்தில் இருந்த விவரங்களை படித்து தெளிவுபடுத்தி உள்ளனர். ஸ்வஸ்தஸ்ரீ எனத்தொடங்கும் அந்த சாசனத்தில் ராஜேந்திரசோழனின் ஆட்சியின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பீமன் சிலை என அழைக்கப்படும் 15 அடி உயரமுள்ள பாறையின் அடிப்பாகத்தில் இவை எழுத்துக்களாக உள்ளன. சில வரிகள் அழிந்து போய் உள்ளன. இது அக்காலத்தில் பிரபலமான ஒருவரின் இறப்புக்காக நடப்பட்ட நினைவுத் தூணாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டதில் இருந்து ஏற்கெனவே கிடைத்துள்ள சோழர் சாசனங்களில், விழிஞ்ஞம், கொல்லம், கொடுங்கல்லூர் பகுதிகளில் ராஜராஜசோழனும், ராஜேந்திரசோழனும் நடத்திய படையெடுப்புகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை, தமிழர்கள் அதிகம் வசித்து வந்த இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி அப்போதைய மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: