வேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நேற்று சீமை கருவேல மரங்களை தொழிலாளர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு கற்சிலை இருப்பதை கண்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது, 3 அடி உயரம் உள்ள 1000 ஆண்டு மகாவீரர் சிலை என தெரிந்தது. இதையடுத்து சிலையை எடுத்து சென்று நெமிலி தாசில்தார் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.