நாகை அருகே 1000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

 நாகை அருகே 1000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!


நாகை அருகே 1000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 1000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி மற்றும் நாகை டி.பி.எம்.எல் கல்லூரி ஆகியோர் இணைந்து தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் வரலாற்று ஆசிரியர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே ஆராய்ச்சி நடத்திய தரங்கம்பாடி பகுதிக்கு சென்றனர். தமிழர்கள் பயன்படுத்திய தாழிகள், 3000 ஆண்டுகள் பழமையானது என்று ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி வரலாற்று ஆசிரியர் எஸ்.சேவியர் தெரிவித்தார். தமிழர்கள் வயதாகும் போது, அவர்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து வெளியேறியதாகவும், இறக்கும் போது உட்கார்ந்த நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

நாகை அருகே உள்ள தில்லையாடி பகுதி பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்படாமல் கிடந்ததாக மற்றொரு ஆசிரியர் ராமலிங்கம் குறிப்பிட்டார். நவீன பானைகளைப் போல் அல்லாமல், பழங்கால பானைகள் மிகவும் தடினமாக இருந்ததாக தெரிவித்தார். முதுமக்கள் தாழி புவியில் இருந்து தோண்டி எடுக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றும், பலமுறை கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் டி.எம்.பி.எல் கல்லூரி ஆசிரியர் செல்வராஜ் கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு தில்லையாடி கிராமப் பகுதியில் 2 தாழிக்கள் கண்டெடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து தற்போது மேலும் சில தாழிக்கள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முதுகலை வரலாற்று மாணவர் காளிதாஸ் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: