அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!

அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! - 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!

அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிற்றாறு ஓடும் ஆற்றில் உள்ள மதகில் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு தொல்லியல் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர். பிரியா கிருஷ்ணன், ”திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு எதிரில் பழமை வாய்ந்த சித்தாறு ஒன்று பாய்கிறது. கோவிலில் இருந்து சற்று தள்ளி இந்த ஆற்றிற்கு செல்ல படித்துறை உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இப்படித்துறைக்கு அருகில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. இதனுள் சிவலிங்கமும் சிறிய நந்தி ஒன்றும் உள்ளது. மண்டபத் தூணில் ஒருவர் வணங்கிய நிலையிலும், மண்டபத்தின் இடது புறத்தில் ஆறு பாயும் பகுதியில் நடராஜர், சிவலிங்கத்திற்கு பசு பால் சொரியும் அம்சம், , ஒர் ஆண் வணங்கும் நிலையில் ஒரு சிற்பமும், இரு பெண்கள் சிற்பங்கள் ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகிறது. இதன் அருகில் உள்ள மதகிலும், ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக் கல்வெட்டுகளின் அருகில் உள்ள கோவிலிலில் இருந்தும், வேறு எங்கோ இருந்தும் கொண்டவந்து தடுப்புசுவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் முழுமையான வாக்கியங்கள் கிடைக்கவில்லை.

அரிதான 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. மீதி கல்வெட்டுகள் அனைத்தும் 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். இந்த சுவற்றிலும் மதகிலும் காணப்படும் கல்வெட்டுகள் மூலமாக சுந்தரப் பாண்டியனின் மெய் கீர்த்தியும், தேவதானம், இறையிலி, பிரம்ம தானம் போன்ற நிலதானம் பற்றியும், வெட்டி, பாட்டம், அந்தராயம் , புரவரி, கடமை, காரியவாராச்சி ஆகிய வரிகள் பற்றியும், நல்லூர் குறிச்சி ,மதுரோதய நல்லூர், பனையூர், என்ற ஊர்களின் பெயர்களும், பல்லவராய சுந்தர பாண்டிய பேரேரி, விக்ரம பாண்டி பேரேரி போன்ற ஏரிகளைப் பற்றியும், விரத முடித்தான், அரையன், நடுவிநங்கை போன்ற குடிமக்களின் பெயர்களும், சில நிலஅளவுகளும், எல்லைகள் பெயர்களும் காணப்படுகிறது.

நடுவிநங்கை என்னும் பிராமணப் பெண்மணி, நந்தாவிளக்கு ஒன்றையும், ஆடுகளையும் தானமளித்ததாக கல்வெட்டு தெரிவிப்பதால் அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததை அறிய முடிகிறது. மேலும் பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துக்களை அறச்செயல்களுக்குப் பயன்படுத்தியதையும் அறிய முடிகிறது. கல்வெட்டுகள் முழுமையாக படிக்க இயலாததால் முழுமையான செய்திகள் பெற இயலவில்லை. இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் வாசிக்க இயலாமலேயே அழிந்து விடுகின்றன. இது போன்றக் கல்வெட்டுகளை அரசு தனிக் கவனம் செலுத்தி பாதுக்காக்க வேண்டும்”என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: